காசை மட்டும் குறிக்கோளாக வைத்து சுத்திக்கொண்டு ,உறவினர்களை அண்ட விடாமல், லஞ்சம் தவறில்லை , ஊழல் தவறில்லை இன்று என்னிடம் காசு இருக்கிறது, இதை வைத்து மூன்று தலைமுறை வாழ்ந்து விடலாம் என்று கணக்கு போட்டு வாழ்ந்த பல குடும்பங்கள் இன்று எதாவது ஒன்றை இழந்து நிற்பதை காண முடிகிறது, பணத்தை வைத்து சாதிக்கலாம் என்று போட்ட கணக்கை தாண்டி பணத்தினாலும் சாதிக்க முடியாத சோதனைகள் அவர்களை சூழ்ந்து இருக்கிறது
கேட்கும் போது எல்லாம் காசை கொடுத்து மகன் விரும்பியதை வாங்கி கொடுத்த தந்தை, மகன் தண்ணி அடித்து காமாலை வந்து செத்து போக, படையளில் quater பாட்டில் வைத்து! என் மகனுக்கு ரொம்ப பிடிக்குங்க அதான் என்று கலங்கி நிற்கிறார்
250 சிசி பைக் 2 லட்சம் ரூபாய் கொடுத்து பையனை வோட்ட வெச்சு அலகு பார்த்து, ஒரு நாள் accident ல மூளை சிதறி இறந்து போக, ரோட்டுல வண்டி ஒட்டிக்கிட்டு போயிட்டு இருக்கும் இளைஞர்களை பார்த்து மெதுவா போ பா என்று அறிவுரை செய்து கொண்டு இருக்கிறார்
ஷோபா செட் கிழிந்து விட்டது என்று அதை தைக்க ஒருவனை ஆலைத்து வந்த பெண்மணி, ஷோபா செட் பிரிதான் உள்ளே பஞ்சுக்கு பதில் பழைய துணி மணிகள், பெண்மணி இன்னொரு துணிமூட்டையை தைப்பவரிடம் கொடுத்து இத உள்ள வைத்து தைக்க சொன்னார் , அவனும் தைத்தான் , தைத்துக்கொண்டு இருக்கும் போது அந்த பெண்மணி சோபாவில் இருந்து எடுத்த துணியை மூட்டை கட்டி கொண்டு இருந்தார், சோபா தைப்பவன் ஏங்க அம்மா இந்த துணியை மூட்டை கட்டறிங்க ?
இத எடைக்கு போட்டு பாத்திரம் வாங்க தான் என்ற அந்த பெண்ணின் பதிலை கேட்டு, என்ன நினைத்தானோ செய்த வேலைக்கு கூலி கூட வாங்காமல் , இப்படி ஒரு பொம்பலையை வாழ்நாளில் பார்த்தது இல்லை என்று சொல்லி விட்டு சென்று ஒரு வருடத்தில் அந்த பெண்மணியின் மகன் இறந்து போக
பிறரை பார்த்து பொறாமை படும் அவள் குணம் மாறி இருக்கும் என்று எண்ணி இருந்த வேளையில், அந்த பெண்ணிடம் துக்கம் விசாரிக்கும் போது
ரோட்டுல நடந்து போகும் ஒரு பெண்ணை கை காட்டி , இவ புள்ளை எல்லாம் உயிரோட இருக்கு என் மகனை மட்டும் கடவுள் எடுத்துகிச்சு என்று கதற, இவங்க கடைசி வரைக்கும் திருந்த மாட்டாங்க என்று தெரிந்தது, அவள் வசிக்கும் தெருவில் வாழும் மக்கள் இவள் கண் பட்டு தங்கள் மகனுக்கு ஒன்றும் ஆகி விட கூடாது என்று அடிக்கடி சுத்தி போட்டு ஆரத்தி கரைத்து ரோட்டுல கொட்ட, எப்ப அந்த ரோட்டை கடந்தாலும் ஆரத்தி எதாவது வீட்டின் முன்பு இருக்கும்
இது ஒரு நல்ல குடும்பம் ,பையன் படிச்சு வெளியுருல நல்ல வேலை, ஒரு வருஷம் கழிச்சு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு திட்டம், தலை வலிக்கு ஸ்கேன் பண்ணி பார்க்கும் போது தான் தெரிஞ்சுச்சு , மூளையின் மைய பகுதியில் cancer கட்டி , இங்க கை வெச்சு ஆபரேஷன் பண்ணுற அளவுக்கு மருத்துவம் வளரலைனு docter சொல்ல, அந்த மைய பகுதியில் இருந்து தான் கால் நகம் முதல் தலை முடி வரை நரம்பு பிரியும், வலி இல்லாமல் இருக்க மட்டும் மருந்து, ஒவ்வொரு நாள் கட்டி பெருசாக ஆக, ஒவ்வொரு நரம்பை ஆளுத்தி கை ஒரு நாள் செயல் இழக்க, கண் பார்வை ஒரு நாள் பரிபோக, காது ஒரு நாள் கேட்கும் தன்மையை இழக்க, ஒவ்வொரு பாகம் செயல் இழந்து கடைசியில் ஒரு நாள் உயிர் துடித்து போனது , செத்து பத்தாவது நாள் வாங்கின கடன் எல்லாம் சொத்து வித்து செட்டில் பண்ணியாச்சு,
தற்கொலைக்கு முயன்ற சாக முடியவில்லை, தனிமைல இருந்தா இப்படி தான் சாக சொல்லும் , நீங்க எதாவது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வரலாம்ல என்று கேட்க ?
எனக்கு ஒரு அண்ணன் ஒரு தங்கச்சி , இப்ப அண்ணன் தங்கிச்சி ரெண்டு பேரும் பேசிக்கிறது இல்லையாம், எதுக்கு சண்டைன்னு விசாரிச்சத்துல , வாரிசு இல்லாத என்னோட சொத்து உணக்கா எனக்கானு சண்டை போட்டு இருந்திருக்காங்க, அவங்க வீட்டு வாசல் மிதிக்கலாமா பா ? என்று சொல்லி அதிர வைத்தார்
நான் கஸ்ட்ட பட்ட காலத்துல எனக்கு யாரும் உதவி செய்யவில்லை , அதனால் நான் யாருக்கும் உதவி செய்ய மாட்டேன் என்று வாழ்ந்த ஒருவர் வீட்டில் இலவு விழ, பிணத்தை தூக்க இன்னும் ரெண்டு பேர் வேண்டும் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் சொல்ல ? நான் கூப்பிட்டா யாரும் வர மாட்டாங்க,நாங்க வாழ்ந்த வாழ்க்கை அப்படி, நீங்க போன் பண்ணி யாரையாவது வர சொல்லுங்க என்று டிரைவர்ரிடம் கெஞ்சி கொண்டு இருந்தார்
இன்னொரு இடத்தில் ஒருவர் சாவு வேலைகளை இழுத்து போட்டு செய்து கொண்டு இருந்தார், பந்தல் முதல் பாடை வரை, அவரிடம் நீங்க பரவால்ல எல்லா வேலையும் செய்யறீங்க, இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷணா என்று புகழ
என் பையன் foreign ல இருக்கான், நான் இந்தியாவுல தான் சாக போறேன், அவன் flight புடிச்சு வர ரெண்டு நாள் ஆகும் , அதுவரைக்கும் என்ன ஐஸ் பெட்டில வெச்சு பக்கத்துல உட்கார ஒரு ஆள் வேணும், இப்ப இந்த வீட்டுல ஒரு பையன் இருக்கான், அவனுக்கு செஞ்சா அவன் நாளைக்கு எனக்கு செய்வான், அதான் என்று அதிறவைத்தான்
எந்த பொருள் எடுத்தாலும் பேரம் பேசி தான் வாங்குவான், அவன் வந்தா பல கடைக்காரர்கள் பொருள் இல்லை என்று துரத்தி விடுவார்கள், ரோட்டில் எதாவது தள்ளுவண்டி வியபரியிடம் சண்டை போட்டுட்டே இருப்பான் , ஒரு நாள் கை கால்களில் புண் ஏற்பட்டு சீல் வழிந்து கொண்டு இருந்தது , உறவினரிடம் கேட்ட போது, இதுக்கு docter மருந்து கொடுத்து இருக்கிறார் , காசு செலவாகும்னு மருத்து வாங்காம சீ பிடிச்சாலும் பாரவாயில்லைன்னு சுத்திக்கிட்டு இருக்கான் என்றார்
இவனை விட மோசமா பேரம் பேசு இன்னொருவன் அவன் தந்தை எரிக்க மின் மயானம் கொண்டு செல்லும் வழியில் , மின் மயானம் கொண்டு போகுரதை விட , சுடுகாட்டுள்ள விறகு வெச்சு எறிச்சிருந்தா காசு கம்மி ஆகி இருக்கும்ல என்று கேட்டு அம்புலன்ஸ் டிரைவர்க்கு நெஞ்சு வலி வர வைத்து இருக்கிறான்
பத்து வீடு வாடகை, கந்து வட்டி, cutting save செஞ்சா காசு செலவாகும்னு 6 மாசத்துக்கு ஒரு தடவை மொட்டை அடிச்சுக்குவான், ஒரு வாரத்துக்கு ஒரு டிரஸ், ஒரு நாள் வாடகை வீட்டுக்கு குடி போனான்
உங்களுக்கு சொந்தமா பத்து வீடு இருக்கே ஏன் வாடகைக்கு போறீங்க?
என்னாச்சுன்னு தெரியல என்னோட பையன் பாத் ரூம் போனா ரெண்டு மணி நேரம் வெளிய வர மாட்டிங்கிறான் , தொட்டி தண்ணி எல்லாம் காலி பண்ணிடறான், ஒரு நாளைக்கு ரெண்டு சோப்பு போட்டு குளிக்கிறான், மாசம் 60 சோப்பு போட்டு குளிக்கிறான், இடம் மாறினா சரியாகும்னு குடிசை மாதரி வீட்டுக்கு எட்டு ஆயிரம் வாடகை குடுத்து இருக்கிறேன் என்றார்
இன்னொரு வீட்டில் ஒப்பாரி சத்தம் , பந்தலும் காணோம், வீடு முன்னாடி யாரும் chair போட்டு அமர கூட இல்லை, சரி ஒரு எட்டு பாப்போம் என்று வீட்டுக்குள்ள போன, வீட்டுல எல்லாரும் உயிரோட தான் இருகாணுங்க, ஆனா ஒருத்தரை ஒருத்தர் கட்டி புடிச்சு ஒப்பாரி, பிணம் வேறு ரூம்ல இருக்கானு தேடி பார்த்தேன் .எங்கேயும் பொணம் இல்லை, சரி வாய் விட்டு வீட்டுல எல்லாருமே உயிரோட தானே இருக்கீங்க அப்புறம் எதுக்குடா ஒப்பாரின்னு கேட்டா கோவிச்சுக்குவாங்க என்று
ஒருவரிடம் சாந்தமா தோலை தட்டி , ஆலதிங்க, என்ன ஆச்சு ?
உயிருக்கு உயிரா வளர்த்த நாய் செத்திடுச்சு தம்பி , அங்க தான் பொதச்சு இருக்கோம் என்று கதரோ கதரு என்று அவர் கதற , நாய்க்கு அழுவதை பார்த்த முதல் அனுபவம் அவங்க பீலிங் எனக்கு சிரிப்பா இருந்துச்சு
பின்னொரு நாளில் , ஆனதை சொத்துக்கு அடித்து கொண்ட அண்ணன் தங்கச்சி வாழும் அதே உலகில் நாய் இறப்புக்கு கதறி ஆளும் மனிதர்களும் இருக்கிறார்கள்
மின் மயானம் காட்டிலும் விறகுல எரிச்சா காசு கம்மி ஆகும்னு நினைச்ச மகன் வாழும் உலகில் , அந்த நாய்க்கு சமாதி கட்டி ஒவ்வொரு இறந்த நாளில் குடும்பமே சமாதியில் மலர்வலயம் வைத்து கும்பிட்டு கொண்டு இருகிறார்கள்
BY
Santhosh balaji rajagopal

Comments
Post a Comment