#நான்_நின்ன_ப்ரேமிச்சானு

கார்த்திக் தன்னோடு படிக்கும் நண்பனின் தங்கையின் திருமணத்துக்கு செல்கிறான்

அந்த திருமணத்தில் தான் அவளை பார்க்கிறான், பார்த்ததும் ஸ்தம்பித்து போய் வழிமறித்து நிற்கிறான்

அந்த பெண் இவனிடம் மலையாளத்தில், எந்த ப்ரந்தோ, கொறச்சு வழி விடும் என்று சொல்கிறாள்

திருமண பாட்டு கச்சேரி நடக்கிறது, அவள் மேடை ஏறினாள், பிரேமம் படத்தில் இருந்து மலரே நின்னே காணத்திருந்தால் பாடலை படுகிறாள்

கார்த்திக் அப்படியே மெய் மறக்கிறான், வாழ்கைல கல்யாணம்னு ஒன்னு செஞ்சா அது இவளை தான் என்று முடிவு எடுக்கிறான்

நான் தமிழ் ! அவ மலையாளம், அவளோட தாய் மொழியில லவ் propose பண்ணி அவளை அசத்தனும், உண்ண மட்டும் விரும்பல, உன்னோட ட ட ட.... மொழியையும் விரும்பறேன்னு அவளை impress பண்ணனும் என்று முடிவு எடுக்கிறான்

அடுத்த நாள் மலையாளம் டியூஷன் போறான், மலையாள படம் பார்க்கிறான், ஒரே வருடத்தில் ஒரு மலையாளி போலவே மாறிவிடுகிறான்,

நண்பனிடம் அவள் படிக்கும் காலேஜ் அட்ரஸ் வாங்கிக்கொண்டு, அவளை தேடி செல்கிறான்

அவளை கண்டு பிடித்து, தன்னோட காதலை மலையாளத்தில் தெரிவிக்கிறான்

நான் நின்ன ஸ்நேகிச்சு, நீ இல்லா ஜென்மம் யான் மரிச்சு போய், நின்ன கண்ட முதல் நாளே நின்ன சிநேகம் கொண்டு, எந்த மொழி எந்த உடை எல்லாம் மாரி போய்

Hello mr.  நீங்க என்னமோ சொல்லறிங்கன்னு தெரியுது, ஆனா ஒன்னும் புரியல

கார்த்தி அதிர்ச்சியுடன், போன வருஷம் கல்யாணத்துல என் கிட்ட மலையாளத்துல பேசினிங்க, பாட்டு பாடுனீங்க,

உங்கள புடிச்சுப்போய் உங்க தாய் மொழி மலையாளத்தை கத்துகிட்டு மலையாளத்துல லவ் சொல்ல ஒரு வருஷம் ட்ரைனிங் எடுத்துட்டு வந்திருக்கேன்

ஏங்க முட்டாளா நீங்க, கல்யாணத்துக்கு முதல் நாள் பிரேமம் படம் பார்த்தேன் , நிவின் பால் மேல crase, சோ ரெண்டே ரெண்டு மலையாள வார்த்தை கத்துக்கிட்டேன், basically i am singer சோ அந்த பாட்டை பாடினேன்

நீங்க மலையாளம் இல்லனா பரவா இல்ல, என் காதலை ஏத்துகொங்க,

நான் பொறக்கும் போதே மாமா பையனுக்கு fix பண்ணிட்டாங்க, நான் அவரை கட்டிக்கிறாதா? எனக்காக மொழியை மாற்றிக்கொண்டு உங்கள கட்டிக்கிறதா ?

நீங்க உங்க மாமா பையனையே கட்டிகொங்க, என்னோட வலி ஒருவருடம் தான், அவரோட காதல் 20 வருஷம், என்னால இத தாங்கிக்க முடியும் , நான் வரேன் bye

காதல் தோல்வியுடன் சோகத்துடன் கார்த்திக் பாலத்தில் நடந்து வந்துகொண்டு இருந்தான் ,

அவனை ஒரு பெண் வழி மறித்து, தெலுங்கில் நான் உன்னை ப்ரேமிச்சு , பெல்லி சேஷ இஷ்டமோ என்று கேட்க

கார்த்திக் அவளிடம்,நீங்க என்ன காதலிக்கரிங்க , நான் தெலுங்குன்னு நெனச்சு நீங்க தெலுங்கு கத்துகிட்டு, என் கிட்ட தெலுங்குல லவ் சொல்லறிங்க

ஆமாம்

ஆனா நான் தெலுங்கு இல்ல

அப்ப என்ன காதலிக்க மாட்டீங்களா?

காதலிப்பேன் , உன்ன ஏத்துக்குவேன்

எப்படி ஒடனே ஓகே சொல்லிட்டீங்க?

நான் உன்னை வேண்டானு சொன்னா, நீ சோகமா பாலத்துல நடந்துபோவ, அப்போ ஒருத்தன் வந்து உன்கிட்ட ஹிந்தில லவ் சொல்லுவான், அவனை நீ வேண்டானு சொல்லுவ, அவன் பாலத்துல சோகமா நடந்து போவான், அவன் கிட்ட ஒருத்தி english ல லவ் சொல்லுவா, பட்ஜெட் பத்தாது,பொறுமையும் பத்தாது

நீங்க என்ன சொல்லறிங்கன்னு புரியல,

புரியலைனா பரவால்ல, நான் உன்னை கட்டிக்கிறேன், i too love you
Story by
Santhosh balaji rajagopal

Comments