தனியார் கல்லூரிக்கு interview போனால் நாலு போஸ்ட்டிங்குக்கு நூறு நபர்கள் வந்திருப்பார்கள்

நேத்து டிகிரி முடிச்சவங்க முதல் அடுத்த வருஷம் retire ஆகாரவங்க வரைக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் அமர்ந்து இருப்பார்கள்

Interview என்ற பெயரில் வகுப்பு எடுக்க சொல்வார்கள் ,நாலு மொக்கை கேள்வி கேட்பார்கள்

என்னதான் முக்கி முக்கி நல்லா perform செஞ்சாலும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வது

1. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அசிரியராய் புறக்கணிப்பார்கள்

2. காலேஜ் கரெஸ்பாண்டெண்ட் எந்த ஜாதியோ அந்த ஜாதியை சேர்ந்தவருக்கே முன்னுரிமை

3. குறைந்த சம்பளம் கேட்பவருக்கு முன்னுரிமை

4. புருஷன் நல்ல வேலையில இருக்காரு வீட்டுல பொழுது போகல அதான் இங்க வந்தேன் என்று சொல்லும் பெண்களுக்கு முன்னுரிமை

5.இது போக சிபாரிசு

இதை எல்லாம் தாண்டி வேலை கிடைச்சு உள்ள போனா

Hod மனசுக்குள்ள இவன் நாம சொல்லறதா கேட்பானா , நமக்கு அடிமையா இருப்பானா , நம்ம வேலைக்கு உலை வெய்ப்பனா, என்று மண கணக்கு போடுவார்

முதல்நாளே ஜால்ரா அடித்தால் தான் கேட்கும் பாடம் எடுக்க வாய்ப்பு கிடைக்கும்

ஒவ்வொரு வாத்தியார் ஒவ்வொன்று சிறப்பாக கையாழ்வார், அனைத்தும் தெரிந்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, அப்படி தெரிந்து இருந்தால் அவர் வேறு துறைக்கு சென்று இருப்பார்

ஒரு ஆசிரியர் தவறை தட்டி கேட்கும் போது அவரை கார்னெர் செய்ய அவருக்கு தெரியாத பாடத்தை எடுக்க சொல்லுவார்கள் , ரௌடி தனம் மிகுந்த வகுப்புக்கு அனுப்புவார்கள்

வகுப்பில் இருக்கும் ரௌடியிடம் hod டீலிங் வைத்து இருப்பார் (அவருக்கும் பயம் இருக்கும்ல) தம்பி அந்த வாத்தியார் பாடம் எடுக்கும் போது அவரை தொந்தரவு பண்ணுங்க , அடங்காதீங்க, இத நீங்க செஞ்சா உங்க attendance internal மார்க் நான் போடறேன் , சும்மா இருப்பங்களா செமையா செய்வாங்க

ஆசிரியர் பணியில் சேரும் போது agrement ல கையெழுத்து வாங்குங்க, அதுல பால்வடி பள்ளி கூடத்தில் பிடிச்ச certificate முதல் PHD வரை அனைத்தும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் , பணியில் இருந்து விலகி செல்ல நான்கு மாதங்களுக்கு முன்பு inform செய்ய வேண்டும் , உடனடியாக வேலையை விட்டு போக வேண்டும் என்றால் நான்கு மாதம் சம்பளத்தை திருப்பி கட்ட வேண்டும் , அப்போ தான் certificate திரும்ப கிடைக்கும்

பெரு நகரங்களில் இயங்கும் கலை அறிவியல் கல்லூரி வருடம் 1 லட்சம் பீஸ் வாங்குது ஒரு மானவனிடம்

இந்த ஒரு லட்சம் ரெண்டு வாதியருக்கு சம்பளம் குடுத்தா மீதி மாணவர்களில் பணம் லாபம்

அதனால் மாணவர் எந்த தப்பு செஞ்சாலும் கண்டிக்க மாட்டாங்கா

ஹிஸ்டல்ல தண்ணி அடிப்பான் , கஞ்சா அடிப்பான் ,whitner அடிப்பான் கண்டும் காணாம போகணும்

தவறு செய்யும் மாணவனை தட்டி கேட்கும் இடை நீக்கம் செய்யய் ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை, அப்போ மாணவன் ஆசிரியரை மதிப்பானா ,

வேலைக்கு சேர்ந்த புதிதில் ரத்தம் சூடு ஏறும் , குடும்பத்தை காப்பதானும் என்று எண்ணம் அந்த  சூட்டை தனித்துவிடும்

போனவாரம் காட்டிலும் இந்த வாரம் நம்ம காலேஜ் ல crime ரேட் கோரஞ்சிருக்குன்னு மனச சமாதானம் செஞ்சுக்கணும்

தனது கல்லூரி மாணவன் வெளி இடத்தில தப்பு செஞ்சு போலீஸ் இடம் மாட்டி கொண்டால் முதல் தகவல் கல்லூரி நிர்வாகத்துக்கு வரும் , அவங்க கேஸ் போடுன்னு சொன்னா போடுவாங்க இல்லைனா இல்லை, இதுக்கு சிறப்பு கவனிப்பாக புது commissioner பதவி எடுக்கும் போது அனைத்து கல்லூரியும் பெரிய தொகையை லஞ்சமா pre paid செஞ்சு இருப்பாங்க

இந்த நியூஸ் பேப்பர்ல வராம இருக்க, அப்படியே வந்தாலும் ஒரு தனியார் கல்லூரி என்று தான் வரும் இதுக்கு பத்திரிகை காரனுக்கு ஒரு லஞ்சம்

1950 ல வடிவமைக்க பட்ட syllabus , அதை அப்போ அப்போ பட்டி டீங்கரிங் பார்ப்பாங்க

புது syllabus வெச்சா அதை எடுக்க தகுதியானவர்கள் கிடைக்க மாட்டார்கள், சம்பளம் கட்டுப்படி ஆகாது

SOftware company காரன் கிட்ட கமிஷன் வாங்கிட்டு தேவை இல்லாத பாடத்தை syllabus வைக்கும் யூனிவெர்சிட்டி

பாடம் மட்டும் நடத்தினா படித்தது, document கலெக்ட் பண்ணறது, பீஸ் கலெக்ட் பண்ணறது னு cleark சம்பளத்தை மிச்சம் பண்ண நம்ம கிட்ட தான் வேலை வாங்குவாங்க

ட்ரஸ்ட் என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை இவர்கள் மிச்சம் செய்ய செய்ய கூடாத சில்ரா தனமான வெளியை செய்வாங்க

நல்ல சம்பளம் குடுக்க முடியத்தவங்க எப்படி நல்ல கல்வியை கொடுப்பான்

30 லட்சம் ரூபாய்க்கு TRUST பணத்துல சொகுசு கார் வாங்கி ,10 வருஷத்துல deprisation தேய்மானம் கணக்கு zero value காட்டுங்க, அதை அரசாங்கம் தட்டி கேட்காது

ஒரு வகுப்புக்கு 30 மாணவர்கள் என்ற கணக்கை 60 ஆகா உயர்த்தி விட்டார்கள், இதனால் 3 ஆசிரியர்கள் வேலை இழக்கிறார்கள்

30 லட்சம் ரூபாய் சொகுசு கார் வாங்கரவனுக்கு , 5 லட்சம் ரூபாய் செலவு செஞ்சு 30 பெரு அமரும் வகுப்பு கட்ட முடியாதா?

ஒரு  course க்கு 10 வாத்தியார் வேண்டும் என்றால் 7 பேர் தான் எடுபாங்க

Inspection வரும்போது பக்கத்துக்கு டெபார்ட்மென்டிடம் கடன் வாங்கி கணக்கு காட்டுவாங்க

இதுக்கு ISO certificate வேற( காசு குடுத்தா பிச்சைக்காரனுக்கு தர சான்று கொடுக்கும் நிறுவனம் )

இப்படி சொல்லிகிட்டே போகலாம்

நான் இதுக்கே tired ஆகிட்டேன்

Post by
Santhosh balaji rajagopal

Comments