திருநெல்வேலி மாவட்டதுல இதுவரை பதவி ஏத்துகிட்ட எல்லா insepecter ரும் கடந்த ரெண்டு வருசமா 3 மாச இடைவெளில ஒவ்வொருதனா சாகுறான் , காரணம் கண்டு புடிக்க முடியல, கொலைகாரன் motive என்னனு தெரியல , என்ன பண்ணலாம்

நாம்ம சங்கர பாண்டியனை அந்த ஊருக்கு போஸ்டிங் போடலாம் சார், கூடவே ஜெயமோகன் நடராஜன் சப் inspecter ரா appoint பண்ணலாம் சார்
நல்ல யோசனை, fax அனுப்பிடுங்க, நாளைக்கே join பண்ண சொல்லுங்க

ஆண்டவா போற உசுரு  சொந்த ஊருல போகட்டும், தண்ணி இல்லாத காட்டுல பேப்பர்ல தொடச்சுட்டு உயிர் வாழலாம், அல்வா famous ஊரு யாரு கொலை காரன்னு தெரியாம என்ன சிக்க வெச்சு வேடிக்கை பார்கிறாங்க

அடே ஜெயமோகன் நடராஜா, நீயும் புதுசா போஸ்டிங் வாங்கினவனா, உன்ன எதுக்குடா சப் inspecter ஆக்கினாங்க

சார் எவனுமே இங்க போஸ்டிங் வேண்டானு சொல்லறான், அதான் நம்மள இங்க கோத்து விட்டுட்டாங்க

ஜெயா, நாம எப்படி இத investigate பண்ணுறது, அது வரைக்கும் நாம உயிரோட இருப்போமா ,

சங்கர பாண்டியன் சார், நாம தேடி போக வேண்டாம் , நம்மள தேடி எல்லாம் வரும், நம்ம ராசி அப்படி
------------------
சார் அவசரமா ஸ்டேஷன் வாங்க, நம்ம ஏரியால நேத்து நைட் ஒரு கொலை நடந்து இருக்கு

கொலைகாரன் வீட்டுக்கு வண்டியை விடுங்க,

சொல்லுங்க அம்மா, உங்க புருஷன் என்ன தொழில் பண்ணுறான்

அவரு பழைய இரும்பு இடைக்கு வாங்குறவரு,

யோ ஜெயா, இவனை எல்லாம் யாறுயா கொலை பண்ணுவா ?
------------------------
சார் நேத்து நைட் drunk and டிரைவ் நாலு பேரு புடிச்சுட்டு வந்தோம், அதுல ஒரு தான் செல் போன் எடுத்து எதாவது பிட்டு படம் இருக்குமானு தேடினோம், அப்போ அவன் கேலரில அத்துவரைக்கு செத்து போன போலீஸ் போட்டோ, போன் நம்பர் எல்லாம்மே இருக்கு, நீங்க விசாரிங்க
-----------------
யாருடா நீ , எங்க department ஆளுங்க போட்டோ எதுக்கு நீ வெச்சு இருக்க

நான் ஒரு மனநல மருத்துவர், லஞ்சம் தப்பு செய்யுற போலீஸ் மனசை தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சேன் ,

அது எப்படி உன்னோட மொபைல்ல இருக்கிற எல்லாரும் செத்து போயிருக்கான் ,

தெரியல சார்

யாரு உனக்கு இந்த போட்டோ குடுத்தா, high way ல ஒரு செல் போன் கடை , அந்த cc டிவி கேமரா screen சாட் தான் இது
-------------
ஜெயா வண்டியை செல் கடைக்கு விடுங்க, வீடியோ play பண்ணுங்க , சார் ஒரு வருஷ வீடியோ பார்த்தாச்சு , நம்ம inspecter எல்லாம் நைட் ஒருமணிக்கு அந்த செல் கடைக்கு முன்னாடி ஒரு டெம்போ எடுத்துட்டு வராங்க, அங்க இருக்கிற இரும்பு divider அதை எடுத்து டெம்போல வைக்கிறாங்க , அப்புறம் கிளம்பிடறாங்க
------------
Divider என்ன வெயிட் வரும்,

ஒரு divider 100 கிலோ வரும்,

நேத்து செத்து போனானே பழைய இரும்பு காரன், அவன் கடைக்கு விடுங்க

ஷட்டர் ஓபன் பண்ணுங்க, சார் உள்ள நாலு divider இருக்கு சார்
------------ -

சார் நீக்க குற்றவாளியை நெருங்கிட்டீங்க

முதல் முதல் கொலை செய்யப்பட்ட inspecter , அவர் period ல எதாவது accident கேஸ் file இருந்தா எடுத்து தூசு தட்டுங்க ஜெயா

சார் ஒரு accident கேஸ் ஒரு அம்மா, ஒரு பொண்ணு ஸ்பாட் அவுட், புருஷன் complaint குடுத்து இருக்கான்

அவன் வீட்டுக்கு வண்டியை விடுங்க, ஆல் constable ரவுண்டு up, வீட்டை சுத்தி வலைங்க

உண்மைய சொல்லு நீதானே இத்தனை கொலை பண்ணினது,

ஆமாம் நான் தான் , உங்க ஆளுங்க மட்டும் அங்க divider திருடி விக்கமா இருந்து இருந்தா , இணைக்கு என் குடும்பம் உயிரோட இருந்து இருக்கும், நான் ஒரு அழகான வாழ்கை வாழ்ந்துட்டு இருந்து இருப்பேன்

பெரிய பெரிய துணி கடைக்காரன் , நகை கடைக்காரன், வரி விலக்கு வேணும்னு 10 ஆயிரம் divider போலீஸ் dept க்கு குடுத்ததா சொல்லி, 5 ஆயிரம் கொடுத்து போலி கணக்கு எழுத்தறான்

அத மூணு மாசம் ரோட்டுல வெச்சுட்டு, தினமும் மூணு மூணு divider திருடி எடைக்கு போட்டு உங்க ஆளு வாங்கி சாப்பிடறான்

வருஷம் வருஷம் இந்த divider எல்லாம் எங்க போகுதுன்னு யாரும் கேட்கிறது இல்ல ,கடைக்காரன் குடுகிறத நிறுதிறதும் இல்ல,

என்ன மாதரி யாரும் பாதிக்க பட கூடாது , mr. சங்கர பாண்டியன் நான் இன்னொருத்தன கொலை பண்ணனும், அவன் transfer வாங்கி தப்பிச்சுட்டான், அவன் கொன்னுட்டு நானே surrender ஆகிறேன்,

நீங்க இதுக்கு சம்மதிக்க மாட்டீங்கன்னு தெரியும் , உங்க குழந்தையை கடத்தி வெச்சு இருக்கேன், என்ன வெளிய விடுங்க, அரை மணி நேரம் உங்க குழந்தை வீட்டுல இருக்கும்

ஜெயா அவனை வெளிய விடு
------------ -    
சங்கர பாண்டியன் சார் இப்படி குற்றவாளியை தப்ப விட்டுட்டீங்களே

ஜெயா, இதே accident உன் குடும்பத்துல நடந்து இருந்தா என்ன பண்ணி இருப்ப

சாரி சார்

நாம பண்ணுற சிறு சிறு தப்புக்கு பின்னாடி பெரிய பெரிய பாதிப்பு இருக்கு, அதை எல்லாம் நாம உணர்றது இல்ல
----------------
நல்ல வேலை நீங்க குற்றவாளியை சீக்கிரம் கண்டு புடிச்சிங்க, இன்னும் ரெண்டு நாள் late ஆகி இருந்தா நான் செத்து இருப்பேன்

என்ன சொல்லறிங்க ஜெயா?

அந்த divider எடைக்கு போட்டு காசு பார்க்கலாம்னு எனக்கும் ஒரு ஐடியா இருந்துச்சு
____________
முதல்ல இந்த corporation கிட்ட சொல்லி, இரும்பு divder எல்லாம் தூக்கிட்டு, concrete சிமெண்ட் divider
நிரந்தரமா போட சொல்லணும்

கொஞ்சம் விட்டா நம்மள காவு குடுத்து இருப்பானுங்க

Story by
#santhosh balaji rajagopal

Comments