#சங்கர_பாண்டியன்_நீங்கதான்_இந்த_கொலையாளியை_கண்டுபிடிக்கணும்

சிட்டில இதுவரைக்கும் மூணு கொலை நடந்து இருக்கு, இத கண்டு புடிக்க திறமையான ஆளு நம்ம department ல இருந்தா சொல்லுங்க

நம்ம சங்கர பாண்டியன் இதுக்கு சரிப்பட்டு வருவாருங்க சார்

கூப்பிடுங்க அவரை

Mr. சங்கர பாண்டியன் , நீங்க ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரி, அடுத்த வருஷம் உங்களுக்கு retierment, இந்த கொலையாளியை கண்டு புடிச்சா, உங்க service ல ஒரு மைல் கல்லா அமையும் , இன்னைக்கே சார்ஜ் எடுத்துக்கோங்க

எனக்கு இந்த பொறுப்பை கொடுத்தது பெருமையா இருக்கு சார், இன்னைக்கே சார்ஜ் எடுக்கிறேன் சார்

ஏட்டு அந்த file எடுத்துட்டு கேபினுக்கு வா, கேஸ் details சொல்லு

மொதல் கொலை எல்லாரும் சாதாரணமா தான் பார்த்தோம் சார் , அடுத்த அடுத்த வாரம் மூணு கொலை , எல்லாம் ஒரே மாதரி , ரெண்டு கையை வெட்டி , வயித்துல சதக் சதக் ரெண்டு கத்தி குத்து ,

வாரத்துக்கு ஒரு கொலை, அதுவும் சரியா ஞாயிற்று கிழமை

சங்கர பாண்டியன் investigation ஆரம்பம்

உங்க புருஷன் செத்தது பத்தி நீங்க எதாவது சொல்லுங்க மேடம்

என்ன சொல்லறது சார், குடும்பமே ஸ்தம்பிச்சு போய் இருக்கோம்,

உங்க புருசனுக்கு எதிரிகள் யாரவது?

அப்படி யாரும் இல்ல சார்

தொழில் போட்டி எதாவது?

அவரு அந்த முக்குல பெட்டி கடை வெச்சு பீடி சிகரெட் வித்துட்டு இருந்தாரு, இது ஒரு தொழிலு , இதுக்கு ஒருத்தன் போட்டி போட்டு கொலை பண்ணுவானா சார்

ரெண்டாவது கொலையானவர் வீட்டுக்கு செல்கிறார்

உங்க கணவர் தொழில் போட்டி எதாவது இருந்துச்சா ?

அவனே வேளை வெட்டி இல்லாத வெங்கம் பையன் சார்,

மூணாவது கொலையாளி மனைவியிடம் அதே கேள்வி

அவர் உண்டு face book உண்டுன்னு இருப்பாரு, தட்டுல சோறு போட்டா வந்து சாப்பிட்டுட்டு , மறுபடியும் செல் எடுத்துட்டு போய்டுவாறு

ஏட்டு , கொலையான மூணு பேரும் பெரிய ஆளுங்க இல்ல, ஒரு clue கூட சிக்கலையே

சார் , மூணாவது பார்த்த அம்மா, அவரோட கணவர் face book use பண்ணுவருன்னு சொன்னாங்க , ஆபீஸ் போய் உங்க கம்ப்யூட்டர்ல அவரோட page ஓபன் செஞ்சு பார்த்தா எதாவது சிக்கும்

அவன் பேரு என்ன?
கிட்டு கிருஷ்ணசாமி

சார் , செத்து போன மூணு பேரும் mutual friends சார்

ஏட்டு தல கிருகிருன்னு இருக்கு , ஒரு டீ வாங்கிட்டு வாங்க,

டீ வாங்கி tabel ல வெச்சுட்டு, சார் உங்கள பார்க்க ஒரு ஆளு வெளிய waiting, இந்த கேஸ் விஷயமா உங்கள பார்க்கணுமாம்!

அவரை வர சொல்லுங்க, நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க, நான் கூப்பிட்டா மட்டும் உள்ள வாங்க

பொறாமை பட்டுட்டு என்ன வெளிய அனுப்பறான், இவன் எல்லாம் உயர் அதிகாரியாமா ,

சார் உள்ள போங்க, AC உங்கள வர சொன்னாரு

உற்காருங்க

உங்க பேரு என்ன?

தரன்

சொல்லுங்க இந்த கேஸ்ல நீங்க எந்த மாதரி உதவி உங்கணால பண்ண முடியும் ?

முழு உதவியும் என்னால பண்ண முடியும் சார்,

நன்றி mr. தரன்

இந்த கொலைக்கான காரணம் என்ன mr. தரன்

கொலையான இந்த மூன்று பேருமே face book user

அத நாங்களே கண்டுபிடிச்சிட்டோம்

இந்த மூணு பேரும் கல்யாணம் ஆனவங்க

இது எங்களுக்கே தெரியும் , வேற எதாவது சொல்லுங்க

இந்த மூணு பேரும், எதாவது பொம்பள புள்ள போட்டோவுக்கு போய் நைஸ் டோழினு கமெண்ட் பண்ணறதே முழு நேர வேளை , அதுல காண்டு ஆனா அந்த பொம்பளையோட புருஷன் தான் இவங்கள கொன்னு இருக்கான்

இது எப்படி உங்களுக்கு தெரியும் ?

நான் தான் அந்த புருஷனே

நீங்கதான் கொலை செஞ்சதா?

ஆமாம்

உங்க மனைவி பேரு என்ன?

 கவிதா

எதுக்கு இந்த கொலை ?

நாங்க காதல் திருமணம் செஞ்சுகிட்டோம், வாழ்கை சந்தோசமா போச்சு, அவ facebook account ஆரம்பிக்கிற வரைக்கும்

அவ ஒரு selfi பைத்தியம் , தினம் ரெண்டு போட்டோ upload பண்ணுவா.

என்னோட timeline ல அந்த போட்டோ வரும், நான் தினமும் பார்க்கிற மூஞ்சி தானேன்னு வெறும் லைக் மட்டும் பண்ணுவேன்

ஆபீஸ் முடிஞ்சும் வீட்டுக்கு போனதும், அந்த போட்டோ நல்லா இல்லையா? வெறும் லைக் போட்டு இருக்கீங்க , கமெண்ட் பண்ணல

நான் தான் உன் கிட்ட நேருளா பேசறேன், அப்புறம் எதுக்கு comment
காதலிக்கும் போது உருகி உருகி வர்ணிசிங்க , இப்போ உங்களுக்கு சலிச்சு போச்சா ( ஆமாம்னு உண்மையாவா சொல்ல முடியும், குடும்பம் close)

இல்ல டார்லிங் , அப்ப நமக்கு குடும்ப பொறுப்பு இல்ல, இப்ப நமக்கு இருக்கு, குடும்ப சுமையை சுமகிறதால முந்தி மாறி உன் மேல care பண்ண முடியல

அவ சமாதானம் ஆகலை, போட்டோவை காட்டி அந்த ஆளு டெய்லி நைஸ் தோழி சொல்லாம இருக்க மாட்டாரு,

இந்த ஆளு மதுரை மீனாட்சி க்கு அப்புறம் இந்த பட்டு புடவை உங்களுக்கு தான் பொருத்தமா இருக்குனு கமெண்ட் பண்ணி இருக்காருன்னு சொல்லி என்ன வெறுப்பு ஏத்துவா

அதுக்காக கொலை பண்ணுவயா? உன் பொண்டாட்டியை அடக்கணும், அவள் face book deactivate பண்ண வெச்சு இருக்கனும்

எங்க deactivate பண்ண விட்டானுங்க? பெண்ணியம் புடலங்காணு, ஒரு நாலு பேரு , எங்க இருந்து தான் இவங்களுக்கு தமிழில் வார்த்தை கிடைக்குமோன்னு தெரியாது, அப்படி பேசுவாங்க

தோழி facebook கை விட்டு போய்டாதீங்க, இது ஆணாதிக்க சமூகம் , பெண்களின் உரிமை நசுக்கபடுது, கணவனுக்குன்னு ஒரு எல்லை இருக்கு, அந்த எல்லையை அவரை தாண்ட விட கூடாது, விட்டா உங்க உரிமை போய்டும்னு சொல்லி, deactivate பண்ணலாம்னு இருந்தவளையும் பண்ண விடாம பண்ணிட்டாங்க ,

தெரியாம தான் கேட்கிறேன் கணவனுக்கு என்ன எல்லை ?

சரி அவங்கள எப்படி கொலை செஞ்சிங்க , fake id open செஞ்சு, உங்க கூட பிரியா பேசணும், புருஷன் என்னோட account செக் பண்ணுவாறு , நீங்க இனிமேல் இதுக்கு msg பண்ணுங்கன்னு, அவன் நம்பணும்னு அவக்கூட எடுத்த போட்டோ அனுப்புவேன்

அத பார்த்துட்டு மூடிட்டு இருந்தானா? உங்க புருஷன் உங்களுக்கு மேட்ச் இல்லைனு எனக்கே சொல்லறான் , பிளான் செஞ்சு மூணு பேரையும் வர வெச்சு, நைஸ் டோழினு கமெண்ட் பண்ணற ரெண்டு கையையும் வெட்டி கொன்னேன்

சாரி, இப்போ உண்மையை ஒத்துகிட்டு surrender ஆகா தானே வந்து இருக்கீங்க ?

இல்ல , அதுக்கு வரலை

பின்ன எதுக்கு?

நேத்து என்னோட பொண்டாட்டி போட்டோவுக்கு ஒருதன் , அம்மன் சிலை மாதிரியே இருக்கீங்க, நைஸ் தொழினு கமெண்ட் பண்ணி இருந்தான் அவனை கொலை பண்ண வந்தேன்

Assistant commissioner யின் முகம் வேற்கிறது

இப்ப சொல்லுங்க சங்கர பாண்டியன், நான் எதுக்கு இங்க வந்திருக்கேனு

சதக் சதக்

Story by
Santhosh balaji rajagopal

Comments