சென்னையில் ஒரு வருடம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ட்ரைனிங் முடித்து திரும்பிய நபரிடம் பேசிய போது

சென்னையை சினிமால பார்த்தவங்க , அங்க இருந்து வந்தவங்க கிட்ட சில கேள்விகள் கேட்பது வழக்கம் , சினிமா நடிகரை நேருல பார்த்து இருக்கீங்களா , அவங்க கூட பேசி இருக்கீங்களா போன்ற கேள்விகள்

எல்லாம் தாண்டி அவர் சொன்ன விஷயம்

காலைல குளிச்சுட்டு  பஸ் ஏறி ட்ரைனிங் கிளம்புவேன் , ஸ்டாப்பிங்ல இறங்கினதும் எல்லோரும் ஸ்பீடா நடந்தாங்க  , நானும் அந்த பரபரப்புல ரெண்டு நாள் கால் வலிக்க வேகமா நடந்தேன் , என்னையும் அறியாமல் அவக சுத்தி இருக்கிறவங்க வேகம் என்னை தொற்றி கொண்டது , நானும் வேகமா நடந்த்துட்டு இருந்தேன்

கால் வலி எடுத்துச்சு , அப்போ தான் என்னோட மூளைல ஒரு எண்ணம் தோன்றுச்சு

எல்லோரும் வேகமா போறதால நம்மை அறியாமல் நாம போறோம் , ஆனா

நீ வேகமா போய் புடுங்க போறது ஒன்னும் இல்ல , மூடிட்டு மெதுவா நட என்று ஒரு குரல்

கல்யாண வீடுல ஒரு பணக்காரன் செலவு செஞ்சு ஐஸ் கிரீம் கொடுத்ததை பார்த்து , ஒரு ஏழை கடன் வாங்கி ஐஸ் கிரீம் குடுக்க ஆரம்பிக்கிறான்

இன்னைக்கு பெருபாலான கல்யாணத்துல ஐஸ் கிரீம் கட்டாயம் இருக்கு , தூரத்துல இருந்து வாழ்த்த வந்தவங்க சாப்பிட சோறு அவசியம் , கடன் பட்டு ஐஸ் என்பது தேவை யற்றது

பிறரை பார்த்து வேகமா நாமளும் நடக்க ஆரம்பிச்சா , ரொம்ப தூரம் போனது அப்புறம் தான் தெரியும்

அட பிக்காளி , நம்ம வீட்டை  தாண்டி 2 கிலோ மீட்டர் ஆனாவிசயமா வந்திருக்கோம்னு

செத்ததுக்கு அப்புறம் 6 அடி குழி போதுமானது

வசதியா இருக்கட்டும்னு 10 அடி குழி வெட்டி  என்ன பொதச்சிடுங்கனு ஒருத்தன் சொன்னா எப்படி இருக்கும்

அப்படி தான் சுத்திகிட்டு திரியராங்க

By
Santhosh balaji rajagopal

Comments