30 வயதை கடந்தவர்கள் திருமணத்துக்கு பெண் தேடுவது (பிடிப்பது )  எப்படி ?

30  வயது தாண்டி உங்களுக்கு யாரும் பொண்ணு குடுக்கலயா ? உங்களை போல 30 வயது கடந்து திருமணம் ஆகாத உங்கள் ஜாதியை சேர்ந்த நான்கு பேரு கூட்டு சேருங்கள் , அந்த நான்கு நபர்களில் 3 நபர் வேலைக்கு செல்பவராக , அல்லது சொந்த தொழிலில் இருப்பவராக , மீதி ஒரு நபர் வேலை வெட்டி இல்லாதவராக இருந்தால் நலம்

இதுவரை ஜாதகம் xerox  , ப்ரோக்கர் கமிஸ்ஸின் , மேட்ரிமோனியல் பதிவு கட்டணம் , பரிகாரம்  என்று பல ஆயிரம் செலவு ஆகி இருக்கும்

நீங்க 4 பேரு ஒண்ணா சேர்ந்து உங்க ஊருல ஒரு மாட்ரிமோனியால் ஆஃபீஸ் ஒன்னு ஆரம்பிங்க

இன்ன ஜாதி ஜாதகங்கள் வரவேற்க படுதுனு டிவி பேப்பர் , துண்டு சீட்டு விளம்பரம் பண்ணுங்க

90 ஆண் ஜாதகம் , 10 பெண் ஜாதகம் தான் வரும் , நம்மள மரியே இன்னும் 90 பேரு இருக்கானு ஆறுதலா இருக்கும்

எந்த பெண் ஜாதகம் வந்தாலும் , அவங்களுக்கு உங்க ஜாதகத்தை குடுங்க , 4 பேருக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் இதை பண்ணுங்க , பொன்னும் கிடைச்சுடும் , வேலை இல்லாத ஒருத்தருக்கு வேளையில் கிடைச்சுடும் ,

கல்யாண செலவுக்கு பதிவ்வு  கட்டண காசு இருக்கு

உங்க நோக்கம் நிறைவேறியதும் ,  மத்தவங்களுக்கு பொண்ணு பார்த்து குடுங்க

நமக்கு நாமே மேட்ரிமோனி

இப்படி பல யோசனை இருக்கு , நாடு தாங்காதுனு , இப்போதைக்கு ஒன்னு மட்டும் சொல்லி இருக்கேன்

Comments