நான் தமிழ் எழுத்து பிழையுடன் எழுத்துவதுக்கு காரணம் , நான் படிச்சது முழுக்க இங்கிலீஷ் மீடியம் , அப்போ எனக்கு english நல்லா தெரியுமானு உங்களுக்கு கேள்வி ஏலலாம்

தோராயமா 1986 ஆம் வருடம் ஒரு கிராமத்தில் ஆரம்பிக்க பட்ட ஒரு பள்ளி, அங்க நான் 1987 ஆம் வருடம் lkg சேர்ந்து இருப்பேன் , அங்க பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சர் யாரு என்றால் அந்த ஊர்லயே பிறந்து தமிழ் வழி கல்வி படித்தவர்கள் தான், அவர்களுக்கே தெரியாத இங்கிலீஷ் எனக்கு எப்படி சொல்லி தருவாங்க? சோ எனக்கு தமிழில் எழுத்து பிழை என்றால் ஆங்கிலம் grammer கருத்து பிழை வரும் , இதுக்கு காரணம் தாய் மொழி வழி கல்வி பயலாதது தான்

Lkg வகுப்புக்கு செல்லும் முதல் நாள், என் அம்மா அதே ஸ்கூல்ல வேலை செய்யும் ஒரு மிஸ் இடம் அழைத்து சென்று ட்ரைனிங் குடுக்க சொல்கிறார், பள்ளியில் இருந்து பையனை துரத்தி விட கூடாது என்று தாயின் முன் யோசனை

நான் எங்க அம்மா மடில படுத்துகிட்டே, மிஸ் a for apple , b for boy என்று சொல்வதை கேட்டு திருப்பி சொல்கிறேன் ,

அடுத்த நாள் lkg முதல் நாள் வகுப்பு, உள்ள போனதும் , ஒரு 30 பேரு வரிசையா நிக்க வெச்சாங்க ஒரு மிஸ் , ஒவ்வொருத்தரா மிஸ் கேள்வி கேட்கிறாங்க , வாட் இஸ் யுவர் நேம் ? ஒவ்வொருத்தனும் அவன் பெயரை சொல்லிட்டு மறுபடியும் லைன்ல போயி நின்னுக்கணும், நானும் என் பெயரை சொல்லிட்டு போயி நின்னுட்டேன், அடுத்து கேள்வி வாட் இஸ் யுவர் father name, எனக்கு father name தெரியல , முன்னாடி ஒருத்தன் வாட் இஸ் யுவர் father நேம்னு மிஸ் கேட்டதும் ஒரு பேரு சொல்லிட்டு பின்னாடி போயி நின்னுட்டேன், நானும் a for னு மிஸ் சொன்னா நாம ஆப்பிள்னு சொல்லுற மாதரி , வாட் இஸ் யுவர் father நேம் னு கேட்டா இது தான் answer என்று அவங்க அப்பா பெயரை answer என்று நினைத்து நானும் சொல்லிட்டேன் ,

மிஸ் கண்டுபுடிச்சு, father name தெரியாதா? நாளைக்கு அம்மா கிட்ட கேட்டுட்டு வா என்றார்

அம்மா father நேம் என்னம்மா?

டேய் உங்க அப்பா பேரு என்ன? என்று அம்மா கேட்க

ராஜகோபால் என்றேன்,

இது தாண்டா பாதேர் நேம் என்றார் அம்மா

தமிழில் கேட்டு இருந்தால் சொல்லி இருப்பேன், பாதேர் என்றதும் குளம்பிவிட்டோம்

Lkg எல்லாம் fail பண்ணி விடுறது ரொம்ப கொடுமை, நாங்க எல்லோரும் ukg பாஸ் ஆகி முதல் வகுப்பு சென்றுவிட்டோம் , மணி மட்டும் fail ஆகிவிட்டான், இந்த விஷயம் எல்லா மாணவருக்கு தெரிந்து வருத்தம் கொண்டோம்,

நாம எல்லாம் பாஸ் ஆகி வந்துட்டோம் , நம்ம கூட இருந்த மணி மட்டும் fail ஆகிட்டான், நாம் intraval time அவனை போயி பார்த்து ஆறுதல் சொல்லலாம் என்று முடிவு எடுத்தோம்

எல்லோரும் அவனை சூழ்ந்து , என்னடா மணி fail ஆகிட்ட ?

அது ஒன்னும் இல்ல டா, lkg ukg க்கு மட்டும் தான் interval time சாப்பிட biscut தருவாங்களாம், first ஸ்டாண்டர்ட் பாஸ் பண்ணி போனா biscut தர மாட்டாங்க , அதான் fail ஆகிட்டேன், இங்க பாரு biscuit என்று ஜொப்ல இருந்து எடுத்து காட்டினான்,

சக நண்பரின் சிலர், ஏண்டா மணி முதலையை இத சொல்லி இருந்தா நாங்களும் fail ஆகி இருப்போம்ல்ல என்று மணியிடம் கோபித்து கொண்டார்கள்

இப்படி விவரம் தெரியாத வயதில் fail ஆனவர்கள் இருக்கமாகவே இருப்பதை பின்னாளில் உணர முடிந்தது, நம்மோட படிச்ச 30 பெயரை எங்க பார்த்தாலும் கூனி குறுகி தான் இருந்து இருக்கிறார்கள், படிப்பை பாதியில் விட்டு சென்று இருக்கிறார்கள்

நான் எப்படியோ பாஸ் ஆகிட்டே வந்துட்டேன், தமிழ் ரொம்ப தகராறு , அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்று எழுதுவதற்கு பதிலாக

அவர் ஒரு சிறந்த பொச்சாளர் என்று எழுதி, போதாதா குறைக்க்கு அந்த தமிழ் வாத்தியார் அந்த பேச்சாளர் எந்த கட்சியோ அந்த கட்சியின் தொண்டர் , எல்லாரையும் குச்சி எடுத்து அடித்தால், என்னை மட்டும் காலால் மிதிபார்,

கவிஞர் தயார் ஆனார் என்பதற்கு தாயார் ஆனார் என்று எழுதி, கல்லூரி என்பதால் அடிக்காமல் விட்டார்கள்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு , முதல் இரண்டு exam தமிழ் தான்

பேப்பர் வாங்கி ரோல் number எழுதியாச்சு, தமிழ் முதல் தால் என்று எழுதி விட்டேன்

ரவுண்டுஸ் வந்த ஒரு வாத்தியார் , ஏண்டா தமிழ் முதல் தாள் என்பதே தப்பா எழுதி இருக்க, நீ எப்படி பாஸ் பண்ண போற என்று சாடினார்

நான் தால் என்று எழுதி இருப்பதை அடித்து விட்டு தாழ் என்று எழுதினேன்

ஏண்டா , இதையும் அடிச்சுட்டு இன்னொரு 'ள் இருக்கு அதையும் போட்டு தொலை என்றார் ,

பிறகு அடித்து தாள் என்று எழுதினேன்

அடுத்த நாள் இதே தவறு செய்ய கூடாது என்று வீட்டில் 10 முறை எழுதி பார்த்துவிட்டு வந்து பேப்பர் வாங்கினேன்

ரோல் number எழுதியாச்சு, தமிழ் முதல் தாள் என்று சரியாக எழுதினேன்

அதே வாத்தியார் தான் இம்முறையும் rounds வருகிறார், நான் தாள் என்பதை சரியாக எழுதிவிட்ட கர்வத்தில் அவரை பார்த்தேன்

ஏண்டா , இன்னைக்கு தமிழ் இரண்டாம் தாள், நீ முதல் தாள்னு எழுதி வெச்சு இருக்க, நீ எல்லாம் எப்படி பாஸ் பண்ண போற என்று சொல்லி நகர்ந்து சென்றார்

இப்ப கூட எழுத்துப்பிழை என்பதை எழுத்துபிளை என்றே எழுதினேன், பக்கத்துல கேட்டு கரெக்ட் பண்ணிட்டேன்

என்னோட பதிவை படிச்சுட்டு , நீங்க நல்லா எழுதரிங்க , நீங்க ஏன் புக் போட கூடாதுனு யாராவது கேட்க்கும் போது, தமிழ் வாத்தியார் தன்னோட கால் கவ்வட்டைக்குள்ள போட்டு மிதிச்சது ஞாபகத்துக்கு வந்து போகும்

இங்கிலீஷ் மீடியதால் இந்த தேசம் ஒரு உலக இலக்கியவாதியை தவற விட்டு விட்டது

By
Santhosh balaji rajagopal

Comments