#திவ்யாவை_தேடி_போறேன்

டேய் ஷங்கர் காலேஜ் மூணாவது வருஷம் முடிய போகுது, உன்ன எத்தனை பொண்ணுங்க லவ் செஞ்சாங்க , நீ ஒரு பொண்ண கூட திரும்பி பார்களையே ?

நான் பிளஸ் 2 படிக்கும் போது, பஸ்ல தினமும் ஸ்கூல் போவேன், அப்போ ஒரு பொண்ணு நான் வரும் வண்டில தான் வருவா, அவ வேற ஸ்கூல்

பஸ்ல எத்தனை பேரு இருந்தாலும் அவளோட bag என் கிட்ட தான் குடுப்பா

திடிருன்னு அவ பஸ்ல வரல , என்னனு விசாரிச்சத்துல அவங்க அப்பா transfer ஆகி வேற ஊருக்கு போயிட்டாரு

போன வருஷம் தான் அவங்க திருச்சில இருக்கிறதா கேள்வி பட்டேன்

Trichy னு தெரியும், அவங்க அப்பன் எந்த job, எந்த அட்ரஸ் ஒன்னும் தெரியாது, போட்டோ கூட இல்ல

-------பீல் பண்ணதா மச்சான், வா கோவில் போலாம், இணைக்கு பிரதோஷம்  ,

கோவில் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு , கால் வலிக்குது என்று ஆட்டோ ஏறுகிறார்கள்

ஆட்டோ ஓட்டுனர், திடீர் என்று ஒரு ஆலைப்பு மணி , போன் அட்டென் செஞ்சு ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்

ஆட்டோவில் அமர்ந்து இருந்த ஷங்கருக்கு ஆச்சர்யம்,  ஆட்டோ சார் english பின்னுது

ஆமாம் தம்பி, நான் படிச்சது MBA,,

MBA படிச்சிட்டு ஆட்டோ ஓட்டறிங்க?

எல்லாம் காதலுக்காக தான் தம்பி, என்னோட காதலியை கண்டுபிடிக்க ஆட்டோ டிரைவர் ஆனேன், ஒரு வருஷம் ஆட்டோ ஓட்டினேன், ஒரு நாள் அவளை ஒரு பஸ் ஸ்டாப்ல பார்த்தேன், காதலை சொல்லி கல்யாணம் பண்ணி இப்ப 2 குழந்தை இருக்கு,

வேற வேலைக்கு போலாம்னு ட்ரை பண்ணினேன், என்கூட படிச்ச பசங்க பாதி பேருக்கு வேலை கிடைக்கல, மீதி பேரு மார்க்கெட்டிங் பைக்ல நாயா சுத்துறான் , month end டார்கெட் வெய்யில்ல சுத்தி மண்டை காயறான்,

உண்மையா காதலிச்சேன், காதலியும் கிடைச்சா , நல்ல தொழிலும் அமஞ்சுச்சு

இந்த கதையை கேட்டதும் , ஷங்கர் ஆட்டோ ஓட்ட முடிவு எடுக்கிறான், வீட்டில் காக்கி சட்டை தொங்கி கொண்டு இருந்ததை கண்டு ஷங்கரின் தாய், மகன் போலீஸ் வேலைக்கு சேர்ந்து விட்டானோ என்று பயந்தாள்

திடீர் என்று ஆட்டோவுடன் வந்தான்,

உன்ன படிக்க வெச்சத்துக்கு ஆட்டோ ஓட்டுறேன்னு சொல்லரியே ஞாயமா ?

நல்ல வேலை சொந்த ஊருல ஓட்டாம , திரிச்சில ஓட்டுற , அத்துவரைக்கு சரி

ஒரு வருடம் ஆட்டோ ஓட்டுகிறான், ஒருநாள் சோகமாக ஆட்டோவில் ஷங்கர் சென்று கொண்டு இருக்கும் போது , ஒரு கை தட்டல் , ஆட்டோ என்று ஒருவன் கூப்பிடுகிறான்

ஆட்டோவில் எரியவன் ஒரு கோவிலுக்கு அவசரமா போக சொல்கிறான், போற வழியில் ஒரு இடத்தில வண்டியை நிறுத்த சொல்கிறான், ஒரு பெண் ஓடிவந்து ஆட்டோவில் ஏறுகிறாள் கையில் குழந்தையுடன் , அவள் திவ்யா தான் , அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு

இப்போ குழந்தைக்கு மொட்டை அடிச்சு , காது குத்த போறாங்க

குழந்தை , ஷங்கரின் சட்டையை பிடித்து இழுக்கிறது

திவ்யா வோ, மாமா சட்டையை புடிச்சு இழுக்காதமா , ஆளுக்காகிடும்

திவ்யாவின் புருஷன் , இப்ப நீ என்ன சொன்ன

சட்டையை இழுக்காதனு சொன்னேன்

அதுக்கு முன்னாடி ?

மாமா சட்டையை புடிச்சு இழுக்காதேனு சொன்னேன்

டிரைவர் சார், நாங்க லவ் marriage, பையனுக்கு தாய் மாமன் இல்ல, உங்க மாடில உட்கார வெச்சு காது குதிக்கிறோமே

குழந்தைக்கு காது குத்தும் போது, ஷங்கரின் கண்களில் இருந்து கண்ணீர்

டிரைவர்க்கு குழந்தை மனசு போல, குழந்தைக்கு காது குத்தினா இவரு அழுகிறார்

ஆறு மாதங்களுக்கு பிறகு
------------------------

ஆறு மதத்துக்கு பின்னடியும் அவன் ஆட்டோ தான் ஓடிக்கிட்டு இருக்கான், because MBA, BE  நிலைமை அதுதான்

இதுக்கு நடுவுல அவன், காதலிக்காக ஆட்டோ ஓட்டுற ஐடியா வர காரணமான , அந்த ஆட்டோ டிரைவர்ரை தேடிக்கிட்டு இருக்கான்

Story by

Santhosh balaji rajagopal

Comments