அமெரிக்காவில் ஒபாமா ஹிலாரி தம்பதிக்கு நீண்ட நாள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது ,

நான்கு வயது வரை இயல்பாக இருந்தவன் , ஒருநாள் நேஷனல் geography channel பார்த்துக்கொண்டு இருந்தான்

அதில் ஓடிக்கொண்டு இருந்த ஓரு ப்ரோக்ராம்மை பார்த்து கத்தினான் , அம்மா அப்பா ஓடிவந்து என்ன வென்று கேட்கிறார்கள்

Mummy i know this place already, எனக்கு டிவி ல காட்டும் எல்லா இடமும் எனக்கு தெரியும்

இது இந்திய, தமிழ்நாட்டுல இருக்கிற மதுரை மீனாட்சி கோவில் ,

நான் இந்தியா போகணும் என்று கேட்கிறான்

அந்த 4 வயது குழந்தையின் விருப்ப படி இந்தியா வந்து அவன் சொன்ன அட்ரஸ் தேடி கதவை தட்டுகிறார்கள்

உள்ளே இருந்து சோகம் படிந்த முகத்தோடு இருவர், இவன் அம்மா அப்பா நான் தான் செத்து போன சேகர் திரும்பி வந்து இருக்கேன் , அணைத்து சம்பவமும் நடந்ததை சொல்லி உண்மை என்று நிரூபிக்கிறான்

ஓபவையும் ஹிலரியையும் அமெரிக்கா போக சொல்லிவிட்டு , அந்த 4 வயது சிறுவன் பழைய நண்பனை தேடி போகிறான்

கண்டுபுடித்து , accident ல செத்து போன நான், மறுஜென்மம் எடுத்து வந்து இருக்கேன்

எனக்கு ஒரு சிலது ஞாபகம் இருக்கு , ஒரு சிலது ஞாபகம் இல்ல, என்னை பற்றி சொல்லு என்கிறான்

உனக்கு ஒரு காதலி இருந்தா , அவ பேரு பானு, இப்ப எங்க இருக்கானு தெரியாது,

நண்பா தேடி கண்டுபிடிக்கலாம?

அடே நீ 3 அடி , நாலு வயசு , கண்டுபிடிச்சு என்ன பண்ண போற

ஏன் உன் புத்தி தப்பா போகுது , அவ எப்படி இருக்கானு தெரிஞ்சுக்கணும்னு , ஒவ்வொரு பிறப்புக்கும் ஒவ்வொரு கரணம் இருக்கு, என்னோட மறு பிறப்பு அவளுக்காக தான் இருக்கும்

இருவரும் தேடி கண்டு பிடிக்கிறார்கள்,   ஒரு பள்ளியில் ஆசிரியராக பனி புரியும் பானு , பள்ளி முடிந்து நடந்து வருகிறால்

4 வயது சிறுவன் வழி மறித்து, பானு என்ன தெரியலையா, நான் தான் சேகர், மறுபிறவி, உன்ன தேடி வந்திருக்கிறேன்

பானு அவனை கட்டி அணைத்து அழுகிறாள், சாக தைரியம் இல்ல, நடை பிணமா வாழ்ந்துட்டு இருக்கேன் சேகர்

அதான் நான் வந்துட்டேன்ல, எனக்கு அமெரிக்கால இந்த அம்மா அப்பா இருக்காங்க, இந்த ஊருல போன ஜென்ம அம்மா இருக்காங்க

ஆனா நான் உன்கிட்ட வளரனும், நம்ம காதல் செத்து போனது , செத்ததாவே இருக்கட்டும், நீ எனக்கு அம்மாவா இரு

எண்ணையை உன்னோட சொந்த குழந்தை மாதரி பார்த்துகோ , விதி முடியும் வரை இப்படி இருப்போம்

சரி மகனே என்று பானு 4 வயது சேகரை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு நடந்து செல்கிறாள்
---------------------

பூர்வ ஜென்மத்தில் அவள் அவனை நெஞ்சில் சுமந்தால்

இந்த ஜென்மத்தில் அவள் இடுப்பில் சுமக்கிறாள்

A film by
#santhosh balaji rajagopal

Comments