ஒரு வாரமா என்னோட கடைக்குள்ள ஏதோ புது ஆள் நடமாடுவதை போல உணர்ந்தேன்

பேயா? பிசாச ? ஒரே குழப்பம்

காலைல கடை திறந்ததும் சில பொருட்கள் இடத்தை விட்டு சற்று நகரத்து இருந்தது

பேய்க்கு கால் இல்ல பட் கை இருக்குனு சினிமா அறிவு சொல்லுச்சு

வழக்கமா தினமும் சாமி படத்துக்கு பூ போடுவது வழக்கம் , நேற்று போட்ட பூவை வெளியே வீசிவிட்டு , புதிதாய் படத்துக்கு பூ போடுவோம்

அப்படி தான் புது பூவை சாமிக்கு போட சென்ற போது, படத்தில் தொங்க விட பட்டு இருந்த பழைய பூவை காணவில்லை,

நேத்து நாம சாமி கும்பிட்டோமா? சாமி படத்துக்கு பூ போட்டமா? என்ற குழப்பம்

சரி வீட்டுல கேட்கலாமா என்று யோசித்தேன், கேட்டா கண்டிப்பா ரெண்டு விதமான பதில் தான் வரும்
உனக்கு பொறுப்பில்லை நீ எங்க சாமி படத்துக்கு பூ போட்டு இருக்க போற ?

உனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தி ஆகிடுச்சுன்னு தான் பதில் வரும்

அந்த கருமத்தை கேட்டு வேற தெரிஞ்சுக்கணுமானு, நாமளே டீல் பண்ணலாம்

ஆஞ்சநேயர் கோவில் போயி சாமி தரிசனம் செஞ்சுட்டு, சாப்பிட துளசி கொடுத்தாங்க, துளசியை எடுத்து வந்து கல்லா பெட்டி மேல வெச்சுட்டு, வெளிய ஒரு வெளியா போயிட்டு வந்து பார்த்தா, அந்த துளசி காணோம்

ஒரு வேளை நாம தான் சாப்பிட்டுட்டு ,இங்க வெச்சு மாரி நினைச்சிட்டு இருகோமா ? உண்மையவே வேற யாரோ இதை எடுத்து நம்மள குழப்பரங்களோ என்று சிந்திக்கும் போது ஒரு சத்தம்

எலி என்னை கண்டு பயந்து ஓடியது, அட எலி பண்ணும் வேளையா இது,

தெருவை சுத்தி டீ கடை, உயர்தர சைவ உணவகம், கமகமக்கும் பேக்கரி, 24 மணிநேரம் ஸ்வீட் தயாரிக்கும் இடத்தை எல்லாம் விட்டுட்டு, இந்த fancy கடைக்குள்ள எத சாப்பிட வந்திருப்பான் , இந்த காஞ்சு போன பூவை எல்லாம் சாப்பிட்டு உயிர் வாழனும்னு உனக்கு என்ன தலையெழுத்தா?

இல்ல அவனுங்க அந்த கடைல எல்லாம் கலப்படம் , அத சாப்பிட்டு உனக்கு உடம்புக்கு சேராம போய்டுச்சா?

உயிரை கொள்ளலாமா வேண்டாமா என்று ஒரே குழப்பம், மாலை வேலை ஐயப்பன் கோவில் சென்றேன், அங்கு எலி செத்த நாத்தம், எலியை பற்றி சிந்தித்ததால் அப்படி தோன்றுகிறதா என்று சந்தேகத்துடன், பூசாரியிடம் என்ன வாசம் என்று கேட்டேன், இங்க சமையல் சாமானதுக்கு அடில எலி எதாவது செத்து கிடக்கும் என்றார்

நானும் எலியை கொள்ள முடிவு செய்தேன், எனக்கு இறக்க குணம் இருப்பதால் , எலியை மற்றவர் மாதரி தேங்காய் வைத்து பிடிக்க மனம் இல்லை, சாகும் போது சந்தோசமாக சாகட்டும் என்று mysore பாகு ஸ்வீட் வைத்தேன்,

சாகும் போது இவன் மத்தவங்க மாதரி இல்ல, இவன் நல்லவன்னு சொல்லிட்டே சாகும்னு எதிர் பார்த்தேன்

எலி எதர்த்தமா உள்ள வந்து இருந்தா கண்டிப்பா நான் நினைச்சது நடந்து இருக்கும், வேட்டையாடு விளையாடு இலமாறன் மாதரி , அந்த எலி என்னை ஒரு வாரமா நோட்டம் போட்டு இருக்கு

இவனே அல்சர்ல எதையும் சாப்பிடாம காஞ்சு போயிருக்கான் , இவன் நமக்கு mysore பாக்கு வாங்கி தராணாமா , நாம அத தின்னு சாவோம்னு நினைச்சிட்டு இருக்கான்,

சரியா mysore பாக்க மட்டும் சாப்பிட்டுட்டு , கூண்டுல சிக்காம எஸ்கேப் ஆகிடுச்சு , எப்படி நேக்கா தப்பிச்சு இருக்கும்னு cctv கேமரா ஆய்வு நடத்தலாம் என்றால், நம்ம கடைல அந்த facility இல்ல, மொபைல்ல கூட 2mp கேமரா தான்

நான் எலியை கொள்ள வைக்கிற பண்டங்களை தின்று கொழுத்து போயி பல குட்டிகளை போட்டா, ஒவ்வொரு எலியை கொள்ளும் போதும் பார்ட் 1 , பார்ட் 2 எலி கதை எழுத வேண்டியாதா போய்டும், அது உங்களுக்கு தான் சங்கட்டம்

அதனால நீங்க விநாயகரிடம் ,அவரோட வாகனத்தை சேதாரம் இல்லாம வெளிய போக சொல்லி வேண்டிக்கோங்க, உங்கள காப்பதிக்கோங்க

By
#santhosh_balaji_rajagopal

Comments