#பழைய_கதை_பட்டி_பார்த்து_போட்டு_இருக்கேன்

சார் நம்ம ஏரியாவுல ஒரு வெளிநாட்டுக்காரன் நுழைஞ்சு இருக்கிறதா தகவல் வந்து இருக்கு

நம்ம சங்கர பாண்டியனையும், ஜெயமுறுகனையும் விசாரிக்க சொல்லுங்க

என்ன ஜெயா உனக்கு இங்கிலீஷ் தெரியுமா?

சார் நானே 18 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து போஸ்டிங் வாங்கினவன், எனக்கு எப்படி

சரி சரி வண்டிய ஓட்டு ,

அங்க பாருங்க சார் வெளிநாட்டுக்காரன் ரோட்டுல படுத்து இருக்கான்

அவனை ஸ்டேஷன் கொண்டுவாங்க,

சங்கரபாண்டியன் விசாரிக்க துவாங்குகிறார்

What is your name? Which country?

கருமம் வாய் திறந்து ஏதாவது சொல்லுறானா பாரு

சங்கர் சார் இவன் நடவடிக்கை எல்லாம் பார்த்தா குழந்தை மாதிரியே இருக்கு பாருங்க

தவழ்ந்து போறான், கை சூப்புறான், ஊட்டி விட்டா தான் சாப்பிடறான் , something strange sir

சரி அந்த நாய்க்கு சாப்பிட எதாவது குடுங்க

வெளிநாட்டுக்காரன் சாப்பிட்டதும் தூங்குகிறான்

தூக்கத்தில் ஜார்ஜ் லூஸி என்று முணங்கிக்கொண்டே இருக்கிறான்

சங்கரபாண்டியன் ஜார்ஜ் லூஸி என்ற பெயரில் உள்ள facebook twitter account சென்று profile picture download செய்து அதை அறை முழுவது ஒட்டி வைக்கிறான்

வெளிநாட்டுக்காரன் கண் விழித்து அனைத்து படத்தையும் உற்றுப்பார்த்து ஒரு படத்தை பார்த்து அம்மா என்று அழுகிறான்

அந்த படம் profile உள்ளே சென்று பார்த்தால் பிரேசில் நாட்டவர் என்று தெரியவருகிறது

தூதரகம் மூலம் பிரேசில்க்கு தகவல் கொடுத்தாயிற்று , பிரேசில் நாட்டில் இருந்து இவரை மீட்டு செல்ல குழு ஒன்று இந்தியா விரைகிறது

சங்கரபாண்டியன் அந்த குழுவுடன் விவாதிக்கிறார்

யார் சார் இவர் ?

இவர் பிரேசில் சேர்ந்த ஒரு docter, மெமரி சம்மந்தமா ஆராய்ச்சி செய்பவர் , இவர் பெயர் தாமஸ்

இப்ப ஒரு நோயாளிக்கு cancer வந்தா, அந்த நோய் காரணமா சாவதை காட்டிலும், அந்த நோய் மீது கொண்ட பயத்தால் தான் அதிகம் சாவார்கள்

அந்த நோயாளி இதுவரை cancer வந்து இறந்தவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை மண கண்ணில் ஓட்டி பார்த்து பயந்துகொண்டே இருப்பார்கள்

நம்ம தாமஸ் ஒரு machine கண்டு புடிச்சு இருக்காரு, அதுல cancer னு type செஞ்சா ஒரு மாத்திரை வந்து விழும் , அந்த மாத்திரையை நோயாளிக்கு கொடுத்தா அவனோட நினைவுல இருந்து cancer என்ற சொல்லும் அது சம்மந்தமா இருக்கிற எல்லா நினைவும் அழிந்துவிடும் , உங்களுக்கு வந்து இருப்பது சாதாரண வியாதின்னு அவங்களை நம்ப வைப்பார், அவங்க முன்னாடி cancer னு எழுதி கட்டினா அது எதோ புது வார்த்தை அர்த்தம் தெரியாம முழிப்பாங்க

இப்படி இவர் பல உயிர்களை காத்து இருக்கிறார்

என்ன ஜெயமுறுகன் machine மாத்திரைனு கதை விடுறானுங்க, இது எல்லாம் நும்புற மாதிரியா இருக்கு?

சங்கரபாண்டியன் சார், இது சயின்ஸ் fixtion ஸ்டோரி நம்பித்தான் ஆகணும் , நம்புங்க

ஓகே சார் ,அப்போ நாங்க தாமஸ்சை பிரேசில் ஆலச்சு போறோம்

நோ நோ இவர் இங்கயே இருந்து treatment பார்க்கட்டும், இவர் குழந்தை மாதரி behave பண்ணுறாரு, பல உயிரை காப்பாத்தி இருக்காரு , இவரை நாங்களே treat பண்ணுறோம்

நீங்க அவர் சம்மந்தமா, அவர் வாழ்ந்த இடம் சந்தித்த நபர், படிச்ச புக் எல்லாம் புகைப்படம் எடுத்து இங்க ஆணுபுங்க , நாங்க முடிஞ்ச வரை ட்ரை பண்ணுறோம்

ஒரு வருட treatment முடிந்து தாமஸ் இயல்பு நிலைக்கு திரும்புகிறார்

சொல்லுங்க நீங்க ஏன் குழந்தை மாதரி நடந்துகிட்டீங்க

என்னோட நினைவுகளை ஆழிச்சுட்டாங்க ,

எப்படி?

நான் ஒரு machine வெச்சு இருக்கேன் ,அதுல cancer னு type செஞ்சா மாத்திரை வரும் அத சாப்பிட்டா அது சமந்தமா நினைவுகள் அழியும்

என்னோட நண்பன் என்னிடம் இதை பற்றி நிறைய சந்தேகம் கேட்டான்

இப்ப ஒரு கணவன் மனைவி விவாகரத்து கேட்கிறார்கள் என்றால், அவங்களை hospital வர வெச்சு divorce னு type பண்ணி வர மாத்திரையை அவங்களுக்கு சாப்பிட கொடுத்தா , அவங்க நினைவுல இருந்து divorce எண்ணம் ஆழித்து சேர்ந்து வாழ வாய்ப்பு இருக்கா என்று கேட்டான் ?

நான் முடியும்னு சொன்னேன்

இதை அமெரிக்கா ராணுவதுகிட்ட சொல்லிட்டான்,

அவன் பல கோடி பணம் என் நண்பனுக்கு கொடுத்து , rocket misele autom bomb ,nucluer bomb னு மாத்திரையை type பண்ணி எங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வர சொல்லி இருக்காங்க

உலக விஞ்ஞானிகள் மாநாடு நடத்தி , அங்க வர விஞ்ஞானிகளுக்கு இந்த மாத்திரையை கொடுத்து, அவங்க நினைவுல இருந்து ஆணு ஆயுத சம்மந்தமா data வை ஆழித்து, உலகத்துல அமெரிக்கா மட்டும் தான் ஆணு ஆயுத நாடா இருக்கணும்னு திட்டம்

நான் முடியாதுன்னு சொன்னேன்

என் நண்பன் என்னோட மனைவி மகளை கடத்தி என்ன மிரட்டி formula வை வாங்கிட்டான்

dictonary ல இருக்கிற எல்லா வார்த்தையும் type செஞ்சு ஒரு மாத்திரை எனக்கும் என் குடும்பத்துக்கும் கொடுத்துட்டான் , சோ நான் குழந்தையா மாறிட்டேன் , என்னோட அம்மா மட்டும் தான் என்னோட நினைவுல இருந்து இருக்காங்கன்னு நீங்க சொல்லி தெரிஞ்சுக்கிட்டேன்

இப்ப நான் மீண்டுட்டேன் , ஆனா என் மனைவி குழந்தை எங்க பைத்தியமா இருக்காங்கன்னு தெரியல

சாரி சார், நீங்க பிரேசில் போனதும் இந்த உண்மையெல்லாம் போலீஸ் ட சொல்லி, உங்க நண்பனுக்கு இந்த மாத்திரையை கொடுத்து அவனை அந்த machine தப்பா use பண்ண முடியாத படி பண்ணிடுங்க

நல்ல ஐடியா சங்கர் , thankyou

சார் எனக்கு ஒரு help பண்ணனும்

சொல்லுங்க சங்கர பாண்டியன்

நீங்க பிரேசில் போனதும் உப்புமா னு type செஞ்சு ஒரு மாத்திரை கொடுத்து அனுப்புங்க , அத என் மனைவிக்கு கொடுக்கணும்

உப்புமா அப்படினா என்ன?

அது ஒரு உணவு சார், தினமும் அத சமைச்சு சாகடிக்கிறா

சார் அப்படியே எனக்கு ஒரு மாத்திரை

சொல்லுங்க ஜெயமுறுகன்

சங்கீதானு type பண்ணி ஒரு மாத்திரை வேணும்

சங்கீதா ? அப்படினா என்ன ?

சங்கர பாண்டியன் குறுக்கிட்டு , அது ஒரு பொண்ணு பேரு சார்

ஓகே ஓகே எனக்கு புரியுது , சங்கீதா உங்க பழைய lover , அவங்களை மறக்க முடியாம தவிக்கிறீங்க , am i right?

எங்க ஊருல நல்லா வாழுற புருஷன் பொண்டாட்டிக்கு உதாரணமா, வள்ளுவன் வாசகியை சொல்லுவாங்க, வாசகி மாதரி பொண்டாட்டி அமஞ்சதால தால தான், திருக்குறள் எழுதி உலக பேமஸ் ஆகி இருக்காரு

என்னோட மாமியாரை மட்டும் வள்ளுவர் வீட்டு பக்கம் குடி வெச்சு இருந்தா, புருஷன் பொண்டாட்டியை பிரிச்சு விட்டு, அறத்துப்பால் எழுதின கையாள அருவால் எடுத்து மாமியாரை ஒரே வெட்டு வெட்டி கொலைகாரன் ஆகி இருப்பாரு

சங்கீதா என்னோட மாமியார் பேரு சார்

Story by
Santhosh balaji rajagopal

Comments