மலர் - the science fiction story

ராகுல்  தேம்பி தேம்பி அழுதான் , அவன் அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை  , அவன் காதலித்த மலர் என்ற பெண்ணுக்கு  நாளை திருமணம் , ராகுலின் அம்மா என்னை நோக்கி - நீ எல்லாம் Friend da  இருந்து என்ன பிரயோசனம் என்று
கேட்டார் ?  கேள்வியை தாங்கி கொள்ள முடியாமல் டி கடைக்கு வந்தேன்

அண்ணா சூடா ஆத்தாம ஒரு டி ,  டி  என்னை நோக்கி வந்தது , கை தவறி அது எனது வாட்ச் மிது கொட்டியது , வாட்ச் டைம் machine நாக மாறியது ,  எப்படி மாறுச்சு ? நேத்து    தான் சூர்யா நடிச்ச 26 படம்
பார்த்தேன் , அதனால  மாறுச்சு , சரி டைம் மெச்சினே வெச்சு மொதலில்   எதை மாற்றலாம் என்று யோசித்தேன்

கிழ கொட்டி வேஸ்ட் ஆனா அந்த டிய குடிக்கலாம் என்று டி குடிகலனேன் - வாழ்க்கைல டி ரொம்ப முக்கியம்

கடிகாரத்தை வைத்து பின்னோக்கி சென்று ராகுலின் காதலி மலரின் நிச்சய தார்த்தம், அதை நிறுத்தினேன்

ராகுலுக்கு மலருடன் திருமணம் ஆனது ,  சரி கடிகாரத்தை வைத்து முன்னோக்கி சென்று ராகுலின் வாழ்கை எப்படி இருக்குதுன்னு 10 மாசம் Forward போனேன் , ராகுல் மிண்டும் தேம்பி தேம்பி அழுதான் , விசாரித்ததில் மலர் எதிர்வீட்டு மகேஷ் உடன்  ஓடிபோய் விட்டால் என்று அறிந்தேன்

ராகுலின் அம்மா என்னை நோக்கி நீ எல்லாம் இருந்தும் என்று இழுத்தார் ,  டைம் machine பின்னோக்கி சென்று மகேஷ் எதிர் வீட்டில் குடி வருவதை தடுத்தேன் , ராகுல் சந்தோசமாக குடும்பம் நடத்தினான் , 15 மாதம் froward  சென்றேன் , மிண்டும் ராகுல் தேம்பி தேம்பி அழுதான் , மலர் பக்கத்துக்கு வீட்டு சுரேஷ் உடன் ஓடிபோனால் , ராகுலின் அம்மா என்னை நோக்கி நீ எல்லாம் friend த இருந்தும் !

இதுக்கு எல்லாம் காரணமான ராகுலின் friendship கட் பண்ண முடிவு எடுத்தேன் , அவனை 7 ஆம் வகுப்பில் முதல் முதலாக சந்தித்தது நாபகம் வந்தது , நான் 7 ஆம் வகுப்பு பின்னோக்கி சென்று 7 ஆம் வகுப்பு ஆ பிரிவில் சேர்ந்து படித்தேன் , டைம் machinai  ஓரம் தூக்கி   வைத்து விட்டு ??? மிண்டும் 7 ஆம் வகுப்பில் இருந்து வாழ்க்கைய தொடங்கினேன்

இப்போ நான் காலேஜ் முடிச்சு வேலை தேடிட்டு இருக்கேன் , விட்டுல சும்மா இருக்கிறது பிடிக்காம , பால் வாங்க போகறது , மளிகை சாமான் வாங்க போகறது என்று பனி செய்தேன் , அப்போ தான் முதல் முதலில் ஒரு தேவதைய பார்த்தேன் , எல்லோருக்கும் வரும் காதல் எனக்கும் வந்துச்சு , கண்ணால பேசினா ,

பால் வாங்க போனா அங்கயும் வருவா , 3 மாசம் கண்ணால பேசினா , ஒரு நாள் அருகில் வந்து பேச தொடங்கினால் ,

முதல் முறை செய்யும் தவறால் மொத்த வாழ்க்கையும் தப்பா போய்டுது , ஒரு பையன் cigereet குடிக்க ஆரம்பிச்சா அம்மா அப்பா அவன கண்டிக்கணும் , இல்லாட்டி கஞ்சா குடிக்கிற லெவெலுக்கு போய்டுவான் என்றால் - அவ எதோ ஒரு    
ஆழமான கருத்தை சொல்ல வாரால் என்று புரிந்தது ,

மேல சொல்லுங்க ,

சின்ன வயசுல , வயசு கோளாறுல ஒருத்தன கல்யாணம் பண்ணிகிட்டேன் , இப்போ அதை உதறி உங்க கூட வாழ ஆசை படறேன் , உங்க விருப்பதை சொல்லுங்க என்று சொன்னால் ,

உங்க பேரு என்ன மா ?

மலர் என்றால்

நேரமாச்சு ராகுல் என்னை தேடுவாரு நாம நாளிக்கு பேசலாம் என்று கடந்தால்

நேரம் என்றதும் டைம் machine ல யாருக்காக பின்னோக்கி வந்தோம் , கடைசில ராகுல் ஓட பொண்டாட்டி என்கூட ஓடிவர மாதரி ஆகிடுச்சே , என்று சிந்தித்து ,

இதுக்கு ஒரு முடிவு கட்டனும் என்றால் மலர் ஓட அப்பா முதல் இரவை தடுத்தால் , மலர் பிறக்க மாட்டாள் என்று , பின்னோக்கி சென்று , மலரின் தந்தை முதல் இரவு ரூம் வாசலில் நின்றேன் , அய்யா எனக்காக நீங்க 10 நிமிடம் கழித்து ரூமுக்குள்ள போக முடியுமா ? அப்போ தான் என்னோட வாழ்க்கை, ராகுலோட வாழ்க்கை நல்லா இருக்கும் , தம்பி நீ யாரு ? ராகுல் யாரு ?

தம்பி விளையாடற நேரமா இது , ஒரு பொண்ணு என்ன நம்பி கட்டினா புருசன , பெத்த புள்ளைய விட்டுட்டு வந்திருக்கா , நான் டைம் கு உள்ள போகணும் வழி விடு தம்பி என்று மலரின் தந்தை முதலிரவின் அறைக்குள் சென்றான் ,

அட பிக்காளி பயலே நீயுமா ? என்று மலரின் தந்தை பிறப்பை தடுக்கலாமா என்று யோசித்தேன் ! வேண்டாம் இதை விட மோசமான சம்பவம் அங்க நடக்க வாய்ப்பு இருக்கு , பேசாம என்னோட பிறப்பை நானே தடுக்கலாம் என்று முடிவு எடுத்தேன்

அதுக்கு முன்னாடி இந்த டைம் machine   நை வைத்து நல்லது செய்யலாம் என்று Alfred Nobel
ஆணுகுண்டு ஆராய்ச்சி செய்து அனுகுண்டு தயாரிக்கும் நேரத்தில் ஆல்பெர்ட் நோபுளின் கையை உடைத்து விட்டேன்

ஈழ போரின் போது  நம்மால் ஒன்றும் புடுங்க முடியவில்லை என்று இதயம் கனத்தது , ராஜபக்சே ஓட அப்பன் முதலிரவை தடுத்தாச்சு , இட்டாளி flight ஒன்னு வானத்துல வெடிக்குது , எதுக்கு வெடிக்குது என்று காரணம் கேட்க கூடாது , நீங்களே புரிஞ்சுக்கணும்

கடைசியா என்னோட பிறப்பை நானே தடுக்கணும் , அப்பா அம்மா கல்யாணம் அத கண்ணார பார்த்தேன் , முதலிரவு வாசல் முன்னாடி போய் நின்னுட்டு ,  அப்பா ஒரு 10  நிமுசம் கழிச்சு உள்ள போங்க என்றேன் ,

யாருடா நீ என்ன பார்த்து அப்பா னு சொல்லற , இப்போ தாண்டா எனக்கு கல்யாணம் ஆகி இருக்கு , குடும்பத்துல குண்டு வெச்சிடாத கிளம்பு என்றார் , All the best என்று அப்பாவை வாழ்த்திவிட்டு சென்றேன்

வெளிய வந்து டைம் mechine நை பார்த்து , உன்னால பின்னாடி போக முடியுது , முன்னாடி போக முடியுது , ஏன் !காலத்தை நகராமல் தடுத்து நிறுத்த முடியுது ,  ஆனா மலர் வேற ஒருத்தன் கூட ஓடரத தடுக்கவே முடியல என்று மெசினை பார்த்து தூ என்று துப்பினேன்

என்னைய வெச்சு இவொலோ கேவலமா யாரும் கதை எழுதினது இல்லை , விட்டா என்ன வெச்சு பலான கதை கூட எழுதுவ , மலர ஓடிபோரத என்னால மட்டும் இல்ல கடவுளாலும் தடுக்க முடியாது , நானும் பூமில இருக்க போறது இல்லை ,  து என்று என்னை  துப்பிவிட்டு தன்னை தானே dismantle செய்து கொண்டு அதுவும் மறைந்தது ,

பின் குறிப்பு :  லாஜிக் பார்கிறவன் ரத்தம் கக்கி சாவான்

Comments