ஆத்திகன் vs நாத்திகன்
( பொறுமை இருந்தால் மட்டும் படிக்கவும்)

பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் மோகனை , எங்க வீட்டில் நடக்கும் அய்யப்ப பூஜைக்கு காலையில் வருமாறு ஆலைத்தோம்

அவரும் வந்தார், வந்தவர் ஆபீஸ் நேரமாச்சு எனக்கு டிபன் குடுங்க என்றார், நாங்களோ ஒரு அரைமணி நேரம் பொருங்க என்றோம்,

எனக்கு பசிக்குது , என்னைய பஜனைக்கு கூப்பிட்டு அவமானம் பண்ணறீங்க,

நீ ஆபீஸ் போ, நாங்க டிபன் box ல போட்டு ஆபீசுக்கு குடுத்து விடறோம்

அது எல்லாம் முடியாது என்று பஜனை முடிவதுக்குள் ஆடம் பிடித்து சாப்பிட்டு விட்டு ஆபீஸ் கிளம்பி விட்டார்

அடுத்த வருடம் மோகனுக்கு திருமணம் நடக்கிறது , மாப்பிள்ளை விருந்து ஸ்வீட் என்று சாப்பிட்டு , கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் ஓவர் சுகர், மயக்க வருகிறது என்று ஹாஸ்பிடல் போயி செக் செய்தால் , சுகர் complaint , docter மூன்று வேளை ஊசி போட வேண்டும் என்று சொல்லி இன்சுலின் எழுதி கொடுத்து விட்டார்கள்

ஒரு மாதம் ,மூன்று வேளையும் இன்சுலின் போட்டு கொண்டு இருந்தார், ஒரு நாள் நானும் ,எனது அம்மாவும் அய்யப்பன் கோவில் பஜனை முடித்துவிட்டு ,சக்கரை பொங்கல் வாங்கிக்கொண்டு எதார்த்தமாக மோகன் வீட்டுக்கு சென்று பொங்கல் சாப்பிட கொடுத்தோம்

மோகனோ ,நானே சுகர் patient இத சாப்பிட்டு சாக சொல்லரியா என்று கேட்டார்

எனது அம்மா, இந்த பொங்கல் சாப்பிட்டா உன் உயிர் ஒன்னும் போய்டாது என்று வலுக்கட்டாயமாக பொங்கலை அவர் கையில் கொடுக்க, அவரும் சாப்பிட்டார்

அடுத்த நாள் அவருக்கு வேர்த்து விருவிருத்து இருக்கிறது, ஹாஸ்பிடல் போயி செக் செய்தால் சுகர் குறைஞ்சிடுச்சு, இனி ஊசி வேண்டாம் , மாத்திரை போதும் என்று docter சொல்லிவிட்டார்கள்

அடுத்த மாதம் மோகன் எங்கள் வீட்டுக்கு வந்து , எங்க வீட்டுல அய்யப்பன் பஜனை வெச்சு இருக்கோம் கலந்துக்க வேண்டும் என்று ஆலைத்தார் , கடும் விரதம் பஜனை என்று அவர் பிஸி , கொஞ்ச நாள்ல அவர் ஆத்திகனாக மாறிவிட்டார்

--------------
நான் பிளஸ் டூ பாஸ் செய்ததும் எனக்குல் இருக்கும் நாத்திகன் விழிக்க ஆரம்பித்தான் ,

நாம் என்னதான் சாமி கும்பிட்டாலும் அச்சு அடிச்ச question பேப்பர் மாரவா போகுது, எல்லோரும் அவனுக்கு தெரிஞ்ச question தான் வரணும்னு சாமியை வேண்டுறான் , சாமி யாருக்காகவும் question பேப்பர் மாத்த போவது இல்லை என்று எத்தவது அறிவு சொல்லியது

அய்யப்பன் கோவில் மாலை போட்டு செல்லும் போது, மலைகளில் வேனில் செல்லும் போது வாந்தி வந்தது, உடனே, நான் தான் கடும் விரதம் இருந்து மாலை போட்டேன் , எனக்கு எதுக்கு வாந்தி வருதுனு கேள்வி

பிறகு ஒரு நாள் typoid காய்ச்சல் தாக்கியது, ஒரு வாரம் பின்பு எடுத்த பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் எனது சுகர் லெவல் 180 என்று காட்டியது ,

அம்மாவின் மடியில் நான் படுத்து கொண்டு இருக்கேன், திடீர் என்று என் கண்கள் மீது ஈரம் , என்னடா என்று பார்த்தால் , அம்மா அழுதுகொண்டு இருக்கிறார்,

நான் என்ன பாவம் செய்தேன் , என் பையனுக்கு சுகர் வந்திருக்கு, நான் எந்த சாமிக்கு எந்த குறை வைத்தேன் என்று பேசினார்

எனக்குள் இருக்கும் ஆன்மீகவாதி கரைய தொடங்கினான் , ஆமாம் நாம நல்லவங்க , நமக்கு சுகர் வருத்துனா கடவுள் இல்லை என்று என்ன ஓட்டம்

எங்க உள்ளூர் docter, coimbatore ல பெரிய docter ஒருவரிடம் சென்று ஆலோசனை பெறுமாறு எழுதி கொடுத்தார்

( docter பெயர் soker, hospital நேம் ,அதுல ஒரு டகால்டி சக்கரை அறக்கட்டளை , வெளி படையை சொன்னா problem வரும், சோ பட்டும் படாம )

Docter க்கு போன் செய்தோம், காலை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் வர சொன்னார் , பள்ளு மட்டும் விலக்கிக்கொண்டு , பஸ் ல 2 மணி நேரம் பயணம் செய்து கோவை ஹாஸ்பிடல் அடைந்தோம்

வரவேற்பு அறையில் அழகான சேலை கட்டிய பெண்கள், இதுவரை நுர்ஸ் எல்லாம் வெள்ளை கவுன்ல பார்த்தது, முதல் முறை uniform பட்டு புடவை ,

ஒருவர் ஊசியுடன் வந்து பெரிய சிரஞ்சில் ரத்தம் எடுத்தார் , பிறகு 100 கிராம் gulcose சாப்பிட குடுத்து அரைமணி நேரம் இடைவெளியில் மீண்டு ரத்தம் எடுக்க பட்டது, மீண்டு ஒரு மணி நேர இடைவெளியில் ரத்தம் எடுக்க பட்டது , மொத்தம் மூன்று முறை

அம்மா அருகில் வந்து, இப்ப உடம்பு எப்படி இருக்குது என்றார்

ரத்ததுல சக்கரை ஆலவை டெஸ்ட் பண்ணுறேன்னு சொல்லிட்டு மொத்த ரத்தத்தை எடுத்துட்டானுங்க, ரத்தம் இருந்தா தானே அதுல சக்கரை இருக்கும் என்றேன்

என்னை சுத்தி இருந்தவர்கள் சிரித்தார்கள், இவ்வளவு காஸ்ட்டதுல எப்படி ஜோக் வருது என்று அம்மா கேட்டார்

பிறகு மேலே எங்க ஹோச்பிட்டல் நடத்தும் ஹோட்டல் இருக்கு அங்க போயி சாப்பிட சொன்னார்கள்

கம்பு ராகி சோளம் என்று நாம் மறந்த உணவுகள், விலை பட்டியல் அருகில் இதில் எவ்வளவு நார் சத்து என்று percentage கணக்கு வேற ,

அங்கு வந்த பல பேருக்கு ராகி கம்ம்பு எல்லாம் புதிது போல , வேற்று கிரக வாசி போல பார்த்து கொண்டு இருந்தார்கள்,

வெறும் வயிறு, ரத்தம் வேற எடுத்தாச்சு , சாப்பிட்டே ஆகணும், கோதுமை உப்புமா வாங்கி சாப்பிட்டாச்சு

மீண்டு ஹாஸ்பிடல் நுழைந்தால், பரபரப்பு , உள்ளே docter நுழைகிறார், சுத்தி 5 nurse, உள்ளே ஆலைத்தார்கள், ரிப்போர்ட் பார்த்தார்,

உங்களுக்கு சுகர் இல்ல, typoid ல டெஸ்ட் செஞ்சதால சுகர் எச்சு காட்டி இருக்கு , இனிமேல் சுகர் வாரமா இருக்க என்ன சாப்பிடனும்னு எங்க nurse சொல்லுவாங்க என்றார்

நுர்ஸ் பின் சென்றால், அவர் டயட் வகுப்பு எடுத்தார், 100 கிராம் சாதம், 50 கிராம் கீரை, மாலை 100 கிராம் சுண்டல் என்று அனைத்தும் கிராம் கணக்கு ,

அம்மா முதல்ல வீட்டுக்கு போனதும் எடை machine ஒன்னு வாங்கணும் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள், பெஞ்ச்ல அமர்ந்து இருந்த ஒருவர் மயங்கி விழுந்தார்

அறையில் இருந்து docter வெளிய வந்து, மயங்கியவரை எழுப்பி, உங்களுக்கே சுகர் 300, நான் வெறும் கோதுமை மட்டும் தானே சாப்பிட சொன்னேன், கண்டதை தின்னா சுகர் ஏறி இப்படி தான் மயக்கம் வரும் என்றார்

மயங்கிய நிலையில் இருந்த அவர் சுதாரித்துக்கொண்டு , சார் இப்ப தான் உங்க ஹோட்டல்ல உப்புமா சாப்பிட்டேன், பாருங்க பில் என்று நீட்டினார் , docter க்கு பிரஷர் ஏறிவிட்டது

ஒருவழியாக அங்கு இருந்து தப்பித்தோம், 3000 ரூபாய் செலவு 10 வருடம் முன்பே

எனக்குள் இருக்கும் நாத்திகன் இன்னும் அதிகம் கேள்வி கேட்க தொடங்கினான், லோக்கல் பெரியார் எல்லாம் இல்லை, ஒன்லி foreign டார்வின், பிக் bang தியரி, கடவுள் இல்லை என்று பேச ஆரம்பித்தோம், அதுக்குன்னு ஒரு டீம், உலகம் பிரபஞ்சம் என்று கேள்வி மேல் கேள்வி

வாழ்கை ரொம்ப புரட்டி போடவும் , மீண்டும் கோவில், கார்த்திகை மாதம் மீண்டும் அய்யப்பன் கோவில் போக தொடங்கினேன், பஜனை கலை கட்டியது, கோவில் விட்டு வெளியே வரும் போது , எட்டாம் அறிவு கேள்வி கேட்க தொடங்கியது, அது என்ன கார்த்திகை மாதம் மட்டும் மாலை போடறாங்க என்று, செருப்பு எடுத்து அந்த கேள்வி கேட்கும் எட்டாவது அறிவை துரத்தி விட்டேன்,

ஒரு பாடல் அய்யப்பா உன்ன நான் மறக்க முடியுமா , மறந்திட்டு என்னால இருக்க முடியுமா

யார் இது இவ்வளவு அழகாக படுகிறார்கள் என்று பார்த்தால் ஒரு நாலு கொழந்தைகள் ,

அவங்க பாட பாட எதோ பாரம் குறைவது போல இருந்துச்சு, எதோ கரைகிறது

பல வருடம் சென்று பின்பு நமக்கு வயசு ஆகிடும், இப்ப பாட்டு பாடிட்டு இருக்கிறவங்க கல்யாணமாகி , அவங்க பசங்க பாட வந்திடுவாங்க

அந்த பஜனையில் அவர்கள் பாடும் பாட்டை கேட்டு விட்டு, வீட்டில் வந்து படுக்க வேண்டும், அவர்கள் பாடிய பாடல் மனதில் ஒளித்துக்கொண்டே இருக்க வேண்டும், அப்படி ஒரு தருணத்தில் படுக்கையில் இந்த உயிர் போக வேண்டும் , அதுக்கு ஐயப்பன் அருள் புரிய வேண்டும்

By
#santhosh_balaji_rajagopal

Comments