#ஒஜோ_போர்டு

நேத்து திடிருன்னு ஊருக்கு கிளம்பி போய்ட்டே, நைட் நான் மட்டும் ருமூல தனியா

திடிருன்னு நைட் ஒரு மணி இருக்கும், லிண்டல்ல ஏதோ சத்தம் என்று கிஷோர் தனது நண்பன் கார்தியிடம் கூறினான்

டேய் லிண்டல் full லா சரக்கு பாட்டில், எலி ஓடுனா கூட சத்தம் வரும், காலேஜ் முடிஞ்சு ரூமுக்கு போயி பாட்டில் clean பண்ணி எடைக்கு போட்டு வர காசுல தண்ணி அடிப்போம்

இந்த பஸ் வேண்டாம் , நாம வேற பஸ்ல போவோம் கார்த்திக்

இந்த பஸ் ல ஏறு

அங்க பாரு முன்னாடி ஒரு பொண்ணு, செமையா இருக்கா

ஒருநாள் நான் ஊருக்கு போன கேப்ல இந்த வேலையா

நீ இங்கயே இரு நான் போயி பேச்சு கொடுக்கிறேன்

நமக்கு எதுக்கு கிஷோர் இது எல்லாம்,

இல்லடா , என் உள் மனசு சொல்லுது அவ எனக்காக பொறந்தவனு

அவ இருக்கிற அழகுக்கு உனக்கு அவ செட் ஆக மாட்டா

Poor fellow you wait and see ,

அந்த பெண்ணை கிஷோர் நெருங்குகிறான்,

யாரு நீ , நேத்து கை காட்டி சிக்னல் குடுகிற, பப்ளிக்ல ஒரு பொண்ணு கிட்ட இப்படியா behave பண்ணுவ

என்ன பண்ணறது நீங்க அவ்வளவு அழகு, என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியல

Oh அய்யாவுக்கு அவ்வளவு தைரியமா ?

உங்க bag ல என்ன எழுதி இருக்கு ?

Whats app னு எழுதி இருக்கு

எனக்கு உங்க whats app number கிடைக்குமா?

பார்த்து ஒருநாள் கூட ஆகலை, ஒரு பொண்ணு கிட்ட number கேட்கிற

பத்து நாள் ஆனாலும் நான் இத தான் கேட்க போறேன்

நான் ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு, எதோ ஐட்டம் மாதரி approach பண்ணுற

பேர கேக்குறது அந்த காலம், இது மாடர்ன் வேர்ல்ட் , pls என்ன ஆலய விடாம number குடுங்க

சனி ஞாயிறு ரெண்டு நாள் என்னையே நெனச்சுட்டு இரு, திங்கள்கிழமை இதே பஸ்ல வா, எனக்கு என் மனசுக்கு நீ சரினு பட்டுச்சுனா number தரேன்
--------/---//  /------
ரூமுக்கு சென்று பழைய பாட்டில் எல்லாம் சுத்தம் செய்கிறார்கள் , clean பண்ணும் போது , அவர்களுக்கு ஓர் போர்டு கிடைக்கிறது , அது தான் ஒஜோ போர்டு

இது என்னது , எதோ விளையாட்டு கணமா இருக்கு , இதையும் எடைக்கு போடலாம் என்று கடைக்கு எடுத்து செல்கிறார்கள்

கடைக்காரன் வாங்க மறுக்கிறார், இது உங்களுக்கு எங்க இருந்து கிடைச்சுது?

எங்க ருமூல

எங்க இருக்கு உங்க ரூம்?

அத மில் ரோடு back சைடு

தம்பி அந்த ஒரே ரூமை சேர்ந்த நாலு பேரு ஒருத்தருக்கு ஒருத்தர் வெட்டிக்கிட்டு செத்தனுங்களே அந்த ரூம் தானே

தெரியாது

அங்க காலியா இருந்ததே அந்த ரூம் தான், உன் கைல இருக்கு பார் ஒஜோ போர்டு , இத விளையாடி தான் செத்தனுங்க

இது என்ன விளையாட்டு ?

நைட் 12 மணிக்கு, ரூம் கதவை சாத்திட்டு, இந்த போர்டு முன்னாடி மெழுகு பத்தி ஏத்தி வெச்சு , செத்து போன யாரவது ஒருத்தரை பேர் சொல்லி கூப்பிட்டா! ஒரு வேலை அவங்க ஆத்மா சாந்தி அடையாம இந்த பூமில சுத்திக்கிட்டு இருந்தா அவங்க நீ கூப்பிட்ட இடத்துக்கு வருவாங்க

அவங்க வந்ததுக்கு அடையாளமா, அந்த மெழுகு பத்தி அணைஞ்சு போய்டும்

அவங்க வந்து என்ன பண்ணுவாங்க?

அவங்க கிட்ட என்ன கேள்வி கேட்டாலும் இந்த போர்டுல abcd -----z வரைக்கும் இருக்கு பாரு  ,அதுமேல டீ tumler வெச்சா , அது நகரும், அது நகர்ந்து போற எழுத்து எல்லாம் சேர்த்து படிச்சா விடை கிடைக்கும்

ஆனா உங்க கைல இருக்கிறது, இன்ஜினீர் student ப்ராஜெக்ட் காக தயாரிச்ச advance மாடல், இதுல பேய் நகர்துறது, speaker வழியா கான்வெர்ட் ஆகி நமக்கு வரும்

-------/////////
நம்ம ருமூல 4 பேரு வெட்டிக்கிட்டு செத்து இருகாணுங்க, இந்த புரோக்கர் இதை எல்லாம் சொல்லாம நம்மள ஏமாதிட்டான்

கிஷோர் என்டா ஒண்ணுமே பேசமா வர ?

இல்ல இந்த ஒஜோ போர்டு நாம விளையாண்டா என்ன ?

இது விளையாடும் போது தான் அந்த நாலு பேரு செத்து இருக்கான்

ஒரு வேலை நாமளும் செத்துட்ட்டா ?

நல்லா கவனி, ஒருத்தரை ஒருத்தர் வெட்டிட்டு செத்து இருக்கான்

நம்ம ருமூல இருக்கிற எல்லாத்தையும் வெளிய வெச்சிடுவோம் , என்னோட கைய கால் கட்டி இந்த போர்டு முன்னாடி உட்கார வை

நான் இருக்கிற ரூம் பூட்டி சாவியை பக்கத்துக்கு வீட்டுல குடுத்திடு, நீ நடக்கிறத ஜன்னல் வழியா வேடிக்கை பாரு

சரி எந்த ஆவியை கூப்பிடலாம்?

இந்த ரூம்ல செத்து போன 4 போரையும் கூப்பிடுவோம் , பழைய பேப்பர் எடுத்து அவங்க பேர் என்னன்னு தேடி எடுப்போம்

இரவு பன்னிரேண்டு , ஒஜோ போர்டு முன்னாடி கிஷோர்

வாங்க வாங்க சேகர் ஆவி அண்ணே

மெழுகு பத்தி அணைகிறது

ஸ்பீக்கர் வழியாக சேகரின் ஆவி எதுக்குடா என்ன கூப்பிட்ட ?

சில சந்தேகம் கேட்கணும்

சரி கேளு

ஆவியா இருந்தாலும் உங்களுக்கு நான் ஒரு டெஸ்ட் வைக்கிறேன் , எங்க ஊரு MLA பேரு என்ன ?

முனியாண்டி

தப்பு , அவன் பேரு துரை சிங்கம்

உங்க அப்பனுக்கு போன் போட்டு கேளு

அப்பா நம்ம ஊரு MLA பேரு என்னப்பா?

துரைசிங்கம்

முனியாண்டினு யாரவது இதுக்கு முன்னாடி MLA இருந்தங்களா?

துரை சிங்கத்துக்கு அவங்க அப்பா அம்மா வெச்ச பேரு முனியாண்டி , பதவி காசு சேர்ந்ததும் பேர மாத்திக்கிட்டான்

பேயே உன்னைய நம்புறேன் , நீங்க நாலு பேரும் ஒருத்தரை ஒருத்தர் எதுக்கு வெட்டி செத்திங்க

சேகர், அருண் , ஜெயமுருகன் நடராஜன் , பாண்டியன், எங்க நட்பு யாருக்கும் கிடைக்காது

எல்லாம் அழிஞ்ச காரணம் , மது போதை, காதல்

ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் காதலிச்ச வந்தோம், எல்லாம் surprise காக, நான் என்னோட lover கீதா வோட டேட்டிங் போயிட்டு வந்தேன்னு தண்ணி போட்டு ஒரு நாள் உலறினேன்

ஒடனே மத்த மூணு பேருக்கும், பொறாமை வந்திடுச்சு, நாமளும் ஒரு பொண்ண லவ் பண்ணி டேட்டிங் போகணும்னு சபதம் போட்டானுங்க

சவால்ல எல்லோருமே ஜெய்ச்சுட்டானுங்க, அத celebrate பண்ண full தண்ணி, ஒஜோ போர்டு எடுத்து ஆவியை கூப்பிட்டோம்

ஆவி கிட்ட என்ன கேள்வி கேட்கிறதுன்னு தெரியாம ? கண்ட கேள்வி கேட்டோம்

பாண்டியன் போன வாரம் எந்த ஊருக்கு டேட்டிங் போனான் ?

ஆலியார் dam

நான் டேட்டிங் போன பொண்ணு பேரு என்ன ?

கீதா

பாண்டியன் டேட்டிங் போன பொண்ணு பேரு என்ன ?

கீதா

ரெண்டு பேரு எப்படி ஒரே பேரு உடைய பெண்ணை லவ் பண்ணி இருக்கோம், எங்க நட்பை பற்றி என்ன நினைக்கிறாய் ஆவியே ?

நீங்க ரெண்டு பேரு மட்டும் இல்ல, நாலு பேரும் டேட்டிங் போனது கீதா கூடத்தான், நீங்க நாலு பேரும் ஒரே பொண்ண தான் டாவு அடிக்கிறீங்க

இத கேட்ட எனக்கு செம கோவம், என் போன்ல இருக்கிற பொண்ணுங்க number திருடி sms பண்ணுற habit என்னோட நண்பர்களுக்கு இருக்கு , அதனால என்னோட கீதாவை இவனுங்க ஏமாத்தி இருப்பானுங்கன்னு நினச்சு, அரிவாள் எடுத்து நான் வெட்ட ஆரம்பிச்சேன், போதை , கடைசில எல்லோருமே செத்துட்டோம், சாகும் போது ஆவி சொல்லுச்சு அடே , உங்க நட்பு நல்ல நட்பு தான், அந்த பொண்ணு கேரக்டர் தான் சரி இல்லனு

அடுத்த கேள்வி கேளு,

சாரி , உங்க கதையை கேட்டு நெஞ்சு பட படனு அடிக்குது, நான் நாளைக்கு கேள்வி கேட்கிறேன் , இப்ப கிளம்புங்க
-----------------------
கார்த்திக் கதவை திறந்து உள்ளே வந்தான் , கிசோரிடம் பேச்சு கொடுத்தான்

மச்சான் , இந்த விளையாட்டு நல்லா இருக்கு, சரியா விளையாண்டா நாம சாதிகிலாம், நாளைக்கு ஷேர் மார்க்கெட்ல எந்த ஷேர் விலை ஏறும், எந்த லாட்டரி சீட்டு வாங்கினா பரிசு விழும் இப்படி கேள்வி கேட்டு நாம பணக்காரன் ஆகலாம் ,

----------------
திங்ககிழமை கிசோர் வழக்கத்துக்கு மாறாக புது சட்டை , கல்லூரி முடிந்து பேருந்தில் ஏறி அந்த பெண்ணை நெருங்குகிறான்

ஹலோ, ரெண்டு நாலா உங்கள பார்க்க waiting, இன்னைக்காவது number கிடைக்குமா ?

நோட் பண்ணிக்கோ, xxxx867456,

இந்த நம்பரை , friend னு save பண்ணட்டா ? Lover னு பண்ணட்டா? Wife னு save பண்ணட்டா?

நீ என்ன ரொம்ப impress பண்ணுற , பட் எனக்கு இந்த மூணு ஐடியாவும் கிடையாது , நீ என் பேர் போட்டு save பண்ணிக்கோ

உன் பேரு என்ன?

#கீதா

Story by
#santhosh balaji rajagopal

Comments