#இன்னொரு_டைம்_machine_கதை

வருடம் 2047 தமிழ்நாட்டுல பல இடத்துல பல கொலைகள் , வயசு வித்யாசம் இல்லாம எல்லாரையும் கொலையாளி கொல்லுறான் ,

போலீஸ் இந்த கேஸ் விசாரிக்கும் போது பல அதிர்ச்சி தகவல் , செத்தவங்க எல்லாருமே கிட்ட தட்ட ஒரே மாதரி உருவ அமைப்பு

60 வயது முதியவர் இறந்து கிடக்கிறார், 6 வயது குழந்தை இறந்து கிடக்கிறது , அந்த அறுபது வயது முதியவர் ஆறுவயதாக இருந்த போது எடுத்த புகை படம், தற்பொழுது இறந்த ஆறுவயது குழந்தையுடன் ஒற்று போகிறது
-----------------
Flash back 2016

ஹெய் நில்லு டீ

என்ன தெரிஞ்சுவன் மாதரி டீ போட்டு பேசுற

அப்போ தெரிஞ்சுட்டு டீ போட்டு பேசலாமா ?

எதுக்கு என் பின்னாடியே வர? கல்யாண வீட்டுல உன்ன பார்த்தேன் , பந்தி பரிமாறினேன் , அப்போ லைட்டா சிரிச்சேன் , அதுக்கு நாக்கு தொங்க போட்டுட்டு பின்னாடியே வருவையா ?

ஹலோ திவ்யா, திவ்யா தானே உங்க பேரு

ஆமாம்

பந்தி பரிமாறும் போது, என்னோட வாழ இலைல நீங்க உப்பு வெச்சிங்க ! உப்பிட்டவரை உள்ள வரை நினைக்கணும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க, அதான் வாழ்க முழுக்க உங்கள நினைகலாம்னு இருக்கேன்

அப்போ என்னோட friend சாம்பார் ஊத்தினா ! அவளை

சாம்பார் உத்தினாவங்களை சாகுற வரைக்கும் நினைக்கணும்னு பெரியப்பா சொல்லி இருக்காரு

ஒரு வழியா திவ்யாவை பேசி பேசியே கார்த்தி கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறான் ,

திவ்யா மூணு மாசம் கர்ப்பமா இருக்கும் போது கார்த்திக் மர்மமான முறைல செத்து போயிடறான்
-------------------------
திவ்யா ஊரை விட்டு ஊரு போயி குழந்தையை பெத்து எடுகிறாங்க , கொழந்தையோட பேரு ஈஸ்வரன் , காலம் அவனை வளர்கிறது

அவனுக்கு ஒரு friend ,பேரு ஜெயமுறுகன் , அவன் சின்ன வயசுல இருந்து வாட்ச் பைத்தியம் , வித விதமா வாட்ச் வாங்கி பிரிச்சு மேயுறது தான் அவன் வேலை
(TIme machine கதை னா வாட்ச் வந்தே திறனும்)

வருஷம் 2047 திடிருன்னு திவ்யாவுக்கு உடம்பு சரி இல்லாம போகுது , ஈஸ்வரனை கூப்பிட்டு , உன்னோட அப்பா இயற்கையா சாகல ,யாரோ கொன்னுட்டாங்க பழி வாங்குற உணர்ச்சி உனக்கு வர கூடாதுனு இவ்வளவு நாள் சொல்லல , இப்ப சொல்லிட்டேன் என்று இறைவனடி செல்கிறாள்

ஈஸ்வரன் இதை நண்பன் ஜெயமுருகனிடம் சொல்ல , ஜெயமுறுகன் நான் ஒரு machine கண்டு புடிச்சு இருக்கேன் , அத வெச்சு முற்காலத்துக்கு போலாம் , பிற்காலத்துக்கும் போலாம் , சோ உங்க அப்பா வாழ்ந்த காலத்துக்கு போயி உங்க அப்பா செத்த காரணத்தை கண்டுபிடிபோம்மா?

Time machine வெச்சு 2016 வராங்க

டேய் 2016 உங்க அப்பா லவ் பண்ணிட்டு இருக்காரு, அவர் சாகுறதுக்க்கு ஒரு மாசம் முன்னாடி என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்க அவர் செத்த வருஷம் தேதி சொல்லு

இல்ல முருகா, நாம அவர் செத்த அன்னைக்கு travel பண்ணுவோம் , அன்னைக்கு paper டிவி பார்த்தா உண்மை தெரிஞ்சிடும்ல

நெற்றிகண்ணை திறப்பினும் குற்றம் குற்றமேன்னு ஒரு புக் தொங்குது பாரு , அத வாங்கு

கார்த்தி என்ற வாலிபர் கள்ள காதல் காரணமாக வெட்டி கொலைனு எழுதி இருக்கு

நீ டிவி on பண்ணு

பெருகி வரும் கள்ள காதல் கொலைகள் , காரணம் என்ன?

சொல்லுங்க சமோசா சந்திரன் , என்ன காரணம் ?

ஈஸ்வரா உங்க அப்பா கெட்டவர் போல

முருகா நீ அவர் சாகுறதுக்கு ஒரு நாள் முன்னாடி போ, அவரை follow பண்ணலாம்

உங்க அப்பா இப்ப கரு தெரிப்பு மையத்துக்குல்ல போறாரு , ஆனா வெளிய வரல , சோ உங்க அப்பா அந்த மையத்துக்குல்ல தான் கொலை செய்ய படுறாரு

நாம மறுபடியும் ஒரு நாள் முன்னாடி போயி, அந்த மையத்துக்குள்ள ஒளிஞ்சுக்குவோம்

கார்த்திக் உள்ளே நுழைந்த உடன், ராமு நீ செய்யுறது ரொம்ப தப்பு , குழந்தை இல்லைனு செக்up வந்த என்னோட மனைவி கர்ப்பமா இருந்துதிருக்கா, நீ உண்மையா சொல்லாம , கருவை கலைக்க திட்டம் போட்டு இருக்க

உன்னோட lab assistant எனக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட்டா

நாய் இங்க பிஸ்கட் தின்னுட்டு , உங்ககிட்ட வந்து கொலைச்சு இருக்கு

எனக்கு பல ஆயிரம் கோடி சொத்து இருக்கு, உன்னோட மனைவி திவ்யாவை நான் தான் முதல்ல காதலிச்சேன், நடுவுல நீ புகுந்து எல்லாத்தையும் கெடுத்திட்ட

என்னைய பிடிக்கலைன்னு சொல்லிட்டா, பிடிக்கலைன்னு சொன்னவ வயித்துல இந்த பிடிகாதவன் குழந்தை வளர்ந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்

என்னோட துரதிஷ்டம், அவ செக் up வரும் போதே கர்ப்பமா இருந்தா

உன் மனைவிக்கு மட்டும் இல்ல, இனி என்னோட கிளீனிக் வர எல்லோருக்குமே என்னோட sperm கருவை தான் வைக்க போறேன்

இந்த உலகத்திலேயே அதிக குழந்தைக்கு அப்பாவா நான் தான் இருப்பேன் என்று சொல்லி கொண்டே கத்தி எடுத்து கார்த்தி வயிற்றில் சொருகுகிறான்

ஈஸ்வரா 2047 ல நிறைய கொலை நடந்துச்சே செத்தவங்க எல்லோருமே உங்க அப்பாவை கொன்னவன் மாதிரியே இருந்தாங்க, நாம மறுபடியும் time machine ல 2047 போவோம்

அங்க கொலை பண்ணுறவனை புடிச்சு விசாரிப்போம்

கொலை பண்ணுறவனை புடிச்சாச்சு, சொல்லு ஏன் இவங்களை எல்லாம் கொன்ன

எங்க அப்பாவுக்கு 1000 கோடிக்கு மேல சொத்து இருக்கு, அதுக்கு 3000 வாரிசு , எனக்கு தான் அந்த சொத்து முழுசா வந்து சேரனும், அதான் எங்க அப்பா அவரோட கருவை வெச்சு உருவாகின எல்லாரையும் தேடி தேடி வெட்டுறேன்

முருகா நாம 2017 போயி உங்க அப்பாவ கொன்னவனை கொள்ளலாம்

வேண்டாம் ஈஸ்வரா அவனோட கரு தான் ,எல்லார் வயிற்றிலும் வளரணும்னு கொடூரமா யோசிச்சவனை கருவுளையே அழிக்கணும்

அவங்க அப்பா முதலிரவு நடக்க விடாம பண்ணிட்டா இவனே உருவாக மாட்டான்

எப்படி தடுக்கிறது?

அவங்க அப்பன் குஞ்சுமணி மேல ஓங்கி ஒரு உதை உதைப்போம்

ஐயோஓஓஓ ஓ ஓ

Story BY
Santhosh balaji rajagopal

Comments