முன் குறிப்பு- குழந்தைகள் பெரியவர்கள், கர்ப்பிணிகள் முதியவர்கள், இதயம் பலகினம் ஆனவர்கள் , ஒழுக்க சிலர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம், because அங்கங்கே பச்சையாக கெட்ட வார்த்தை இருக்கும்
----------------------------------
உங்களுக்கு இந்த காலேஜ்ல வேலை கொடுக்கலாம்னு முடிவு எடுத்தாச்சு , எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கறீங்க ?

நீங்க எவ்வளவு குடுபிங்கன்னு வெளிய விசாரிச்சுட்டேன்

தம்பி அவங்க சொல்லுறது எல்லாம் நம்பாத , நாங்க இப்ப 500 ருபாய் சேர்த்து தறோம்

நீங்க காலேஜ் எப்படி ரீச் ஆவிங்க

உங்க பஸ் வரும் அதுல ஏறி வந்திடறேன்

பைக்ல வரலாம்ல ?

பைக் இல்ல

நான் வேணா லோன் arrange பண்ணுறேன்,

எனக்கு பைக் ஓட்ட தெரியாது

(அந்த காலேஜ்ல ஒரு வருசத்துக்கு மேல ஒருதன்னும் வேலை பார்க்க மாட்டான் லோன் வாங்கி கொடுத்து அடிமை ஆக்க தான் இந்த கரிசனம் )

காலேஜ் திறக்க 2 மாசம் இருக்கு , நீங்க ரெண்டு மாசம் கழிச்சு வந்தா போதும், அதுவரைக்கும் நாங்க பழைய ஸ்டாப் வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்

(ரெண்டு மாசம் சம்பளம் மிச்சம் புடிக்க)

வேலை வாங்கிட்டு வராண்டாவில் நடந்து போகும் போது ஒரு ஆசிரியர் வழி மறித்து

நீங்க ஒரு 10 மாணவர்களை சேர்த்து விடுங்க உங்களுக்கு கமிஷன் தறோம், ஒரு மாணவனுக்கு 500 ருபாய் ஸ்பாட் payment , சம்பளம் போக இது சைடு income

முயற்சி பண்ணுறேன் சார்

(மெயின் income மே முக்கிட்டு இருக்கு , இதுல சைடு income வேற)

ஒரு வாரம் கழித்து ஒரு போன் சார் காலேஜ் விளம்பரம் போஸ்டர் ஊரு முழுக்க ஓட்டனும் கொஞ்சம் உதவி பண்ண முடியுமா ?

(என்ன பசை காய்ச்சி தரனுமா)

சாரி சார் நான் banglore ல இருக்கேன்

(முன்ன பின்ன பெங்களூர் எட்டி பார்த்தது இல்லை என்பது வேற விஷயம் )

ஒரு வாரம் கழித்து மீண்டும் அழைப்பு மணி ,சார் ரெண்டு நாள் கழித்து பிளஸ் டூ ரிசல்ட் வருது ஒரு ஆயிரம் நோட்டீஸ் தறோம் எதாவது ஸ்கூல் முன்னாடி நின்னு ரிசல்ட் பார்க்க வரும் மாணவர்களிடம் நோட்டீஸ் குடுத்து கேன்வாஸ் பண்ணனும்

சாரி சார் நான் இன்னும் பெங்களூர்ல தான் இருக்கேன் , நீங்க ரொம்ப நேரம் பேசினா எனக்கு ரோமிங் சார்ஜ் வருது

ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒரு கால், சார் காலேஜ் inspection வராங்க, எவ்வளவு வாத்தியார் இருக்காங்கன்னு கணக்கு காட்டானும் , நீங்க வந்தே ஆகணும் ,

சரி வரேன் சார்

காலேஜ் inspection என்றால் ஒரே நாளில் அணைத்து துறைக்கும் வர மாட்டார்கள், ஒவ்வொரு துறைக்கும் தனி தனியாக யூனிவெர்சிட்டியில் இருந்து commission ஆட்கள் வருவார்கள்

அவர்கள் வருவதற்கு சில வாரங்கள் முன்பு கல்லூரி ஒரு ரிப்போர்ட் தயாரித்து அனுப்பும் , கமிஷன் ரிப்போர்ட்

பி.com எவ்வ்ளவு வகுப்பு இருக்கு, எவ்வளவு மாணவர்கள் படிக்கிறார்கள் , எவ்வளவு ஆசிரியர்கள் பி.com துறையில் வேலை செய்கிறார்கள் , library யில் துறைக்கு தேவையான யூனிவெர்சிட்டி பரிந்துஉரைத்த அணைத்து புத்தகம் போதுமான எவ்வளவு இருக்கிறது என்று அறிக்கை தயாரித்து அனுப்புவார்கள் ,
அதை யூனிவெர்சிட்டியில் இருந்து வரும் தண்டங்கள் சரி பார்க்கும்

நானும் கிளம்பி போயாச்சு, அங்க போனதும் தான் தெரியுது inspection maths department க்கு என்று, நான் match வாத்தியார் போல நடிக்க வேண்டும்

எட்டு பெருக்கல் எட்டு எவ்வளவுன்னு கேட்டா எட்டுமணிநேரம் கைவிரல் விட்டு தான் எண்ணி சொல்லுவேன் , எனக்கு maths வாத்தியார் வேடம்

சார் எனக்கு பயமா இருக்கு, வரவன் எதாவது ஏடா கூடாமா கேட்டு நான் முழிச்சா பிரெச்சனை வந்திடாதா?

நீங்க புது வாத்தியார்னு சொல்லி சமளிச்சிடுவோம் பயப்படாதீங்க

ஆய்வு குழுவில் ஒரு வயது முதிர்ந்த ஒரு பெண் , நான் லைப்ரரி சோதனை பண்ணனும் , எல்லா வாத்தியாரும் பின்னாடி வாங்க
(ரொம்பவே இந்த அம்மா ஸ்ட்ரிக்ட் போல , தொலைஞ்சானுங்க )

கால்குலஸ்க்கு என்ன பூக் refer பண்ணறீங்க ? அந்த புக் எல்லாம் எடுத்து டேபிள் மேல வைங்க

( யோ கால்குலஸ்னா என்னையா? பின்னாடி வா நான் ரெண்டு புக் எடுத்து தரேன், டேபிள் மேல கொண்டு போயி வெச்சிடு)

நான் ஏன் particular ரா இந்த கால்குலஸ் புக் எடுத்துக்கிட்டு வர சொன்னேன் தெரியுமா?

கோர்ஸ்சா , தெரியாது மேடம் , சொல்லுங்க

இந்த புக் எழுதின author நான் தான்

( அட நாதாரி , விளங்கிடும்)

சக ஆசிரியர்கள் உத்வேகம் ஆனார்கள் , நீங்களா மேடம் , சூப்பர் , போகும் போது ஒரு ஆட்டோகிராப் போட்டு கொடுத்துடு போங்க, நான் bsc படிக்கும் போது உங்க புக் படிச்சு தான் பாஸ் பண்ணினேன் , மாணவர்களுக்கும் நான் இதை தான் பரிந்து உரைப்பேன் , நீங்க புக் போடுறது எப்படின்னு எங்களுக்கும் சொல்லி குடுங்க

( நாலு foreign author புக்ல இருந்து திருடினா , ரெண்டு நாள்ல புது புக் ரெடி பண்ணலாம் )

(அது போக govt appointed வாத்தியார் எல்லாம் புக் போடுவது, பெருமைக்கும் சம்பள உயர்வுக்குமே)

இங்க maths னா எண்ணனும் தெரியாத ஒருத்தனை நிக்க வெச்சு இருக்காங்க , அதை கண்டு புடிக்க துப்பு இல்ல , நீ எல்லாம் புக்கு போட்டு நாசமா போச்சு

MAths department ல 8 பேரு வேலை செய்வதாக கணக்கு காட்டிவிட்டு , 5 பேரை மட்டும் வேலைக்கு எடுத்து இருப்பாங்க, ஆய்வு வரும் போது மீதி மூணு பேரை பக்கத்துக்கு department ல இருந்து கணக்கு காட்ட கூடிக்குவாங்க, 10 department க்கு 30 பேரு சம்பளம் மிச்சம்,

இதை கண்டுபுடிப்பது சுலபம், மொத்த department எவ்வளவு பேரு வேலை செய்விரர்கள் என்று அறிக்கையை வைத்து தெரிந்து கொண்டு, PF PROVIDENT FUND account list க்கும் அதுக்கும் மேட்ச் ஆகுத்தானு பார்த்தா போதும் , பட் that university யில் இருந்து ஆய்வுக்கு வரும் நாய்கள் எலும்பு துண்டை கவ்விக்கொண்டு சென்று விடுவார்கள்

ஒரு வழியா ஆய்வு முடிஞ்சு, காலேஜ் திறக்க ரெண்டு நாள் முன்னமே காலேஜ் போயாச்சு

வந்து desk எல்லாம் arrange பண்ணனும் வாங்க,

இந்த மாதரி எல்லாம் வேலை செய்ய கூடாதுனு தான் அப்பா அம்மா என்ன இவ்வளவு தூரம் படிக்க வெச்சு இருக்காங்க , இத செய்ய நான் எதுக்கு இவ்வளவு படிக்கணும்

என்னால செய்ய முடியாதுன்னு இல்ல, இத மாணவன் பார்த்தா நம்மள மதிக்க மாட்டான்

சார், புரியுது , நீங்க செய்யாலைனா பரவா இல்ல, நாங்களே பண்ணிக்கிறோம், பண்ணுற இடத்துக்கு வந்து சும்மா நின்னு act மட்டும் குடுங்க போதும்

சார் புதுசு போல , அதான் தயங்குறாரு, சின்ன சின்ன வேலை செஞ்சவன் தான் இன்னைக்கு உயர் பதிவில் இருக்கான் சார் புரிஞ்சுதா

நாளைக்கு கக்கூஸ் கழுவ ஆள் வரலைனா இதே dilogue பேசிட்டு ,பேணாயால் எடுத்துட்டு நீங்க கிளம்பிடுங்களா?

ஒருவழியா டெஸ்க் arrange முடிஞ்சதும் , மாலை மீட்டிங் , தாளாளர் சிறப்பு அறிவுரை

நம்ம காலேஜ்க்குன்னு ஒரு குட்டி இருக்கு , அந்த குட்டியை நீங்க காப்பாத்தனும், குட்டி கொஞ்சம் கூட குறைய கூடாது, ஒவ்வொரு ஆசிரியரும் குட்டியை பராமரிக்கணும்

சார், தாளாளர் என்னமோ குட்டி குட்டினு சொல்லுறான், என்ன அது ?

சார் அவனுக்கு english தெரியாது, எங்கயோ எவனோ ஒரு தடவை இவனுக்கு quality னா தரம்னு சொல்லி கொடுத்து இருக்கான் , குவலிட்டியை தான் அந்த ஆளு குட்டி னு சொல்லறான்

எல்லோரும் மானவர்களுக்கு காலேஜ் திறக்கிறது லெட்டர் மூலம் inform பண்ணிட்டு கிளம்புங்க

சார் , போன் அடிச்சு காலேஜ் ரெண்டு நாள்ல திறகுதுன்னு சொன்னா வர போறான், எதுக்கு லெட்டர் ?

லெட்டர் 25 பைசா ஓட முடிஞ்சிடும்

நீங்க ஒரு 150 லெட்டர் எழுதிப்பி குடுங்க

சார் , என்னோட தமிழ் உங்களுக்கு தெரியாது, நான் எழுதினா பெத்தவங்க காரி துப்புவாங்க

நான் எழுதியதை பார்த்து எழுதுங்க

எழுதும் போது, ஜன்னல் வெளிய தாளாளர் ப்ரின்சிபாலிடம்

எழுதி முடிகிற வரை எந்த வாதியாரையும் வெளிய விட்டிடாதீங்க

கண்டார்ஓழி பசங்க, 4 மணி ஆனா bag தூக்கிட்டு கிளம்பிடாரங்க, எங்க தோட்டத்துல 150 ருபாய் கூலி குடுத்தா சூரியன் மரஞ்சு இருட்டு கட்டுற வரை வேலை செய்வானுங்க , இந்த தேவிடியா பசங்க சீக்கிரம் போராணுங்க , இதுல சனி ஞாயிறு லீவு வேற

என்ன சார் அவன் வாத்தியாரை கெட்ட வார்த்தைல ப்ரின்சிபால் கிட்ட பேசிக்கிட்டு இருக்கான், பிரின்ஸ் பேசாம நிக்கிறாரு ?

நாம இருக்கிறதால அவருக்கு மரியாதை குடுத்து பேசுறாரு , நாம போனதும் அவனை இதை விட மோசமா கெட்ட வார்தைல பேசுவான்

காலேஜ் திறந்த உடன் , ஒரு மாணவன் என்னை நோக்கி வந்து சார் ஒரு சந்தேகம்,

கேளு தம்பி

காலேஜ் சேரும் போது , swimming pool நீச்சல் குளம் வசதி செஞ்சு தறோம்னு சொன்னாங்க , சுத்தி பார்த்தோம் எங்கேயும் பூல காணோம் ? எங்க சார் இருக்கு

அதோ காலேஜ் owner நடந்து வராரு, அவர்கிட்ட நேரா கேளு, அவரு தான் pool எங்க இருக்குனு உனக்கு விளக்கி சொல்ல சரியான ஆளு

( அவன் அவன் ஒண்ணுக்கு வரலைன்னு கவலையில இருக்கான் , இவனுக்கு இளநீர்ல தண்ணி வரலைன்னு

மோட்டர் போட்டா கரண்ட் செலவு ஆகும்னு , ஒரு மணி நேரம் மட்டும் தண்ணி மோட்டார் போட்டு off பண்ணிடுவான், அங்க கழுவ தண்ணி இல்லாம ஒருத்தான் பக்கெட் தண்ணி வேணும்னு கத்திக்கிட்டு இருக்கான், இவனுக்கு swimming pool வேணுமாமா? )

Written By
Santhosh balaji rajagopal

Comments