#90_வயது_முதியவரிடம்_ஒரு_பேச்சு_வார்த்தை

அந்த காலத்துல கரண்ட் இல்லாம எப்படி இருந்திங்க ?

Current இல்லாம நல்லா இருந்துச்சு தம்பி, நைட் கீரை சாப்பிட மாட்டோம் , உள்ள பூச்சி இருந்தா தெரியாது பாரு, மாடோ நாயோ கத்துச்சுனா பாம்பு வந்ததை கண்டுக்குவோம்

சூரியன் மறையும் போது உள்ள போனா, மறுநாள் சூரியன் உதிக்கும் போது தான் வெளிய வருவோம் , எனக்கு 10 வாரிசு அதுல ரெண்டு பெண்

( நல்ல வேளை current கண்டு புடிச்சாங்க, இல்லாட்டி பெருசு இன்னொரு பத்து பெத்திருக்கும் )

ரேடியோ ஊருக்குள்ள வந்துச்சு தம்பி, இப்ப இருக்கிற ரேடியோ மாதரி போட்ட உடனே பாடாது, 7 மணிக்கு பெட்டியை தட்டினா, 7.10 தான் on ஆகும்

( செய்தி கேக்கலாம்னு 7 மணிக்கு on செஞ்சா, செய்திகள் முடிவடியாகிறதுன்னு சொல்லும்போது on ஆகும் போல )

டிவி வந்துச்சு, ஊருக்கு ஒரு பணக்காரன் வீட்டுல தான் இருக்கும், குழந்தைக ஆச படும்னு கூட்டிகிட்டு போவேன், கொஞ்ச நாள் தான் அந்த பணக்காரன் tv யை வித்துட்டான்

எதுக்கு ?

ஊருல இருக்கிற அத்தனை புரளி பேசுற பொம்பளையும் அங்கன குத்த வெச்சா , அந்த குடும்பம் விளங்குமா .? டிவி பார்க்க வந்த வேற ஜாதி பொண்ண, அந்த வீட்டு பையன் கூட்டிட்டு ஓடிட்டான்,

( ஒளியும் ஒலியுமா இருந்த குடும்பத்தை ஒழிச்சு புட்டானுங்க )

விவசாயம் எல்லாம் எப்படி பெருசு ?

மோட்டார் வார வரைக்கும் , தண்ணியை கூடைல செந்துவோம், மோட்டார் வந்ததும் எல்லோரும் மாறிட்டாங்க, சில பேரு மட்டும் வீம்புக்கு மாரல

கூடைல தண்ணி செந்தூனா, தண்ணி உடையாம மேல வரும், வெள்ளாமை நல்லா வரும், கர கர கரனு மோட்டார் சுத்துனா தண்ணி உடஞ்சிடும் , வெள்ளாமை கேட்டிடும்னு விஞ்ஞானம் பேசினாங்க

அப்புறம் , எல்லாத்துக்கும் கூலி 10 ரூபாயினா ! எனக்கு 11 ரூபா கூலி தருவாங்க

ஏன் பெருசு ? நீ நல்லா வேளை செய்வியா ?

கிழக்குல இருந்து வேளைக்கு வர வங்களுக்கு காலை சூரியன் மண்டைல அடிக்கும், சாய்ந்திரம் வீட்டுக்கு போகும் போதும் பின் மண்டைல அடிக்கும்

அதே மேற்குல இருந்து கிழக்கு காட்டுக்கு வேலைக்கு போன, காலைல சாயும்காலம் ரெண்டு நேரமும் வெயில் மூஞ்சில அடிக்கும், அதுக்கு ஒரு ருபாய் கூலி சேர்த்து தருவாங்க

( Dearness allowances, city compensatory allowenses எல்லாத்துக்கும் முன்னோடி இந்த சூரியன் சூல் என்று அடிக்கும் allowence தான் போல )

இன்னைக்கு இருக்கிற மாதரி வீடு கிரஹ ப்ரெவேசம் எல்லாம் அமோகமா இருக்காது, ஓலையை பிரிச்சு 10 அடி தள்ளி வெஞ்சா, சொந்த காரங்க 20 பேருக்கு சொல்லி விடுவோம், விசேஷத்துக்கு பத்திரிக்கை குடுக்க வரும் போது வீடு தேடி அழைய கூடாதுனு, இப்ப தான் போன் இருக்கு வழி கேட்டு வந்திடலாம்

25 பேர பசங்க எனக்கு, ஒருத்தன் அமெரிக்காவுல இருந்து ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை வருவான், நான் எது செஞ்சாலும் அதிர்ச்சி ஆவான்

வாழ இலையை வெயில்ல காய வெச்சு,  நெருப்புல பத்த வெச்சா சாம்பல் கிடைக்கும், அதுல தான் பள்ளு விளக்குவேன், 90 ஆச்சு ஒரு சொத்த கிடையாது , அத பார்த்து அதிர்ச்சி ஆவான், விளக்கம் சொன்னா அவனும் வாங்கி தேய்ப்பான்

பழைய சோறும் வெங்காயமும் சாப்பிட்டா முகம் சுழிப்பான், 30 நாள் தொடர்ந்து சாப்பிட்டா இதய அடைப்பு கூட சரி ஆகிடும்னு சொன்னான், அவனும் கரைச்சு குடிப்பான்

ஒரு நாள் நான் வெளியே போன நேரம் பார்த்து, கோவணத்தை எடுத்து கட்டிக்கிட்டு ஊருக்குள்ள போயிருக்கான், அனுபவம் இல்ல பாருங்க பேண்ட் வழியா அவுந்து விழுந்திடுச்சு, அவமானத்துல ஊருக்கு போயிட்டான்

(என்னடா போருள புற முதுகு அவமானம் மாறி build up விடறான் )

ஊருக்கு போனவன் ஒரு பார்சல் அனுப்பினான், உள்ள எதோ ஜோக்கர் ஜட்டியாமா, அத தான் நான் போடணும்னு லெட்டர்

கட்டைல போகுற வயசுல இந்த கட்டைக்கு இது தேவையா, பேரன் மனசு நோக்கக்கூடாதுன்னு போட்டுகிட்டேன்

ஆனா பயமா இருக்கு தம்பி !

எதுக்கு தாத்தா பயம்

காத்தோட்டமா இருக்கறதை அடச்சு வெச்சு ஆண்மை குறைவு வந்திடுச்சுனா !

பெருசு 90 வயசுல இது இருந்தா என்ன இல்லாட்டி என்ன ?

டாய் , யாரு டா நீ கூறு கேட்டவநாட்ட, கோவணம் கட்டி தான் 10 புள்ள பெத்திருக்கேன், இன்னைக்கு ஜட்டி போட்டவன் எல்லாம் ஒண்ணுக்கே முக்கிட்டு இருக்கான் , நான் ஒன்னு சொல்லறேன், இந்த ஜட்டி கம்பெனி காரன் எல்லாம் நல்லாவே இருக்க மாட்டான் தம்பி

(இந்த பெறுசுகிட்ட பேச்சு குடுத்தது தப்பா போச்சே நம்மையும் கோவணம் கட்ட வெச்சிடுவான் போல ) .....

by
#Santhosh Balaji Rajagopal

Comments