#விடுதியில்_திகில்_இரவுகள்

சனி ஞாயிறு ரெண்டு நாள் லீவு விட்டா, ஹாஸ்டல்ல எல்லோரும் ஊருக்கு போயிடுவாங்க ,நீங்க நாலு பேரு மட்டும் போகாம இருக்கீங்க

நாங்க நாலு பேரும் 300 கிலோ மீட்டர் தள்ளி வந்து படிக்கிறோம், போக்குவரத்து செலவு ஜாஸ்தியாகும், அலைச்சல் வேற

சரி சரி, ரூமுக்கு போங்க, வெளிய சுத்த கூடாது என்று சொல்லிவிட்டு விடுதி காப்பாளர் கிளம்புகிறார்

மாணவர்கள் தண்ணியை போட்டுகொண்டு இரவு நேரம் விடுதியை உளவுகிறார்கள், ஒரு தனி அறை , அங்கு இருந்து ஹா ஹா என்று சத்தம்,

ஒரு மாணவன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு , கதவின் அருகில் சென்று யாரு உள்ளே என்று கேட்கிறான்

உள்ளே இருந்து கதவை ஒரு பெண் தட தட வென்று நெஞ்சு தூக்கி போடும் அளவுக்கு தட்டிக்கொண்டே, என் குழந்தையை திருப்பி கொடு, என் குழந்தையை திருப்பி கொடு என்று கதருகிறாள்

நால்வரும் ஓட்டம் எடுத்து, விடுதி காப்பாளர் அறைக்கு சென்று நடந்ததை கூறுகிறார்கள்

தம்பிகளா , உங்கள யார் அங்க போக சொன்னது? அது பல வருசமா பூட்டியே இருக்கு, நாங்களே அந்த பக்கம் போக மாட்டோம், ஏதோ ஒரு அம்மா, கர்ப்பமா இருக்கும் போது,அந்த ருமூல மன்எண்ணெய்
ஊத்தி கொழுதிக்கிட்டு தற்கொலை செஞ்சு கிச்சுன்னு பேசிக்கிட்டாங்க ,

இத பத்தி காலைல பேசலாம் , இப்ப ரூமுக்கு போங்க,

ரூமுக்கு சென்று நால்வரும் தூங்க ஆரம்பித்தார்கள், திடீர் என்று ரூம் கதவின் மீது பல கற்கள் வந்து தாக்குகிறது, படார் படார் என்று சத்தம்

வெளியே வந்து பார்த்தால், மண்டையை பிளக்கும் அளவு கற்கள்,

விடுதி காப்பாளரை அழைத்து வருகிறார்கள், காப்பாளர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைகிறார், தம்பி எனக்கே பயமா இருக்கு, பேய் தான் உங்கள கொல்லறதுக்கு கல்லு எரிஞ்சு இருக்கனும் என்று சொல்கிறார்

அதில் ஒரு மாணவன் அறைக்குள் சென்று carry bag ஒன்றை எடுத்து வந்து, அங்கு இருக்கும் கற்களை பொருக்கி bag யில் போட்டு, அதை கொண்டு சென்று பெட்டியில் பூட்டி வைக்கிறான்

சக தோழன், இத எதுக்கு எடுத்துவைக்கிற?

ஒரு வேளை பேய் இத எரியமா! மனுஷன் எரிஞ்சு இருந்தா, அதுல அவன் கை ரேகை இருக்கும்ல, நாளைக்கு நமக்கு எதாவது ஆச்சுனா , ரேகையை வெச்சு கண்டு புடிக்க போலீஸ் க்கு உதவியா இருக்கும்ல என்று சொல்கிறான்

ஒரு வாரம் ஓடியது, மீண்டும் வெள்ளிக்கிழமை, அனைவரும் ஊருக்கு கிளம்புகிறார்கள், இந்த நால்வர் மட்டும், விடுதி காப்பாளாரிடம் ஊரு கிளம்பறோம் என்று சொல்லிவிட்டு, பக்கத்துக்கு ரூம் மாணவர் உதவியுடன் , இவர்கள் ரூமுக்கு உள்ளே தங்கிக்கொண்டு, வெளியே மட்டும் பூட்டு போட்டு கொண்டார்கள் , இரண்டு நாட்களுக்கு தேவையான உணவையும் சரகையும் வாங்கி ஸ்டாக் வைத்து கொண்டார்கள்

இவர்கள் எதிர்பார்த்த படியே, இவர்கள் கதவை திறந்துகொண்டு இரவு 12 மணிக்கு ஒருவன் உள்ளே நுழைகிறான் , பெட்டியை திறந்து carry bag எடுக்கிறான்,

சட்டென்று light எரிகிறது, பார்த்தால் விடுதி காப்பாளர்

இப்ப சொல்லுங்க, நீங்க தானே கல் எரிஞ்சுட்டு பேய் மேல பழியை போட்டிங்க,

உண்மையை சொல்லுங்க , அந்த ருமூல என்ன நடக்குது,

நான் சொல்றதை வீட, நேரடியா அங்கேயே போகலாம் என்று விடுதி காப்பாளர் அழைத்து செல்கிறார்

ரூம் கதவை தட்டுகிறார், எனக்கு குழந்தையை திருப்பி குடு என்று அலறல் சத்தம்,

அய்யா நான் wadern வந்திருக்கேன் என்றதும், கதவு திறக்க படுகிறது

உள்ளே சமயல்காரியும், principal லும்,

சனி ஞாயிறு ஆனா, principal இங்க வந்து சந்தோசமா இருக்கிறது வழக்கம், அதுக்கு யாரவது இடைஞ்சல் செஞ்சா பேய் பயம் காட்டி துரத்தி விட்டிடுவோம், நீங்க கண்டு புடிச்சிட்டீங்க.

மாணவர்கள், வார்டன் இத கூட மன்னிச்சிடுவேன் , நீ சொன்ன பேய் கதைல எங்களுக்கு நாலு நாலு நிக்கமா பேதி ஆச்சு தெரியுமா?

பேசிக்கொண்டு இருக்கும் போதே பக்கத்து அறையில் இருந்து உண்மையாகவே ஒரு பெண் குரல் ,எனக்கு குழந்தையை திருப்பி குடு என்று

Principal விடுதி காப்பாலாரிடம், யோ என்னையா இது, நாம கதை காட்டினா ? உண்மையவே பேய் இருக்கும் போல என்று பயத்துடன் கேட்க

பயப்படாதீங்க, அது நம்ம காலேஜ் correspondent தான் உள்ள இருக்காரு

அட பிக்காலி பயலுகளா

Story by
Santhosh Balaji Rajagopal

Comments