#வெடிகுண்டு

நாலு பேரு படிச்சு முடிச்சுட்டு தனி தனியா வேலை தேடிட்டு இருக்காங்க ,

ஒருத்தனுக்கு பாம் டெக்னாலஜி தெரியும் , ஒருத்தன் 200 Kms ஸ்பீட் கார் ஒட்டுவான் , ஒருத்தன் திட்டமிடுதல் , ஒருத்தன் கம்ப்யூட்டர்

நாலு பேரும் வேலை தேடி கிடைகள , ஒருநாள் எதார்த்தமாக  டி கடையில் அவர்கள் சந்திக்க நேர்ந்தது , டி வாயில் வைத்து கொண்டு என்ன வாழ்கைடா என்று ஒரே நேரத்தில் சொல்கிறார்கள் , ஒருவர் இன்னொருவரிடம் தனது கஷ்டத்தை சொல்கிறார்கள்

இந்த கதை ஒரு பக்கம் நடக்க , சினிமால ஒரு சூப்பர் ஸ்டார் உருவாகிறார்,

Opening  சாங் , அந்த ஸ்டார் பெண்கள் தோல் மேல கையை போட்டு கிட்டு

பெண்கள் நாட்டின் கண்கள்
பெண்ணை தாயாக மதிக்கணும்

என்று ஆடல் பாடல்

சீன் முடிஞ்சதும்

டைரக்டர் டான்ஸ் அடினதுல ஒருத்தி செமையா இருக்கா , அவல ரூமுக்கு வர சொல்லு

சார் இப்ப தானே தாயா மதிக்கணும்னு சொன்னிங்க

அது என்னோட ரசிகருக்கு , எனக்கு இல்லை

ரொம்ப பேசின வாயிலே மிதிக்கணும்

இந்த ஸ்டார் பேப்பர் படிப்பாறு , கரண்ட் நியூஸ் என்னவோ . அதை படத்துல சீன வெச்சிடுவாரு

மறுபடியும் பழைய கதை , அந்த நாலு பேரு ஒன்னா ஒரே ரூம்ல தாங்கறாங்க

டிவில அந்நியன் இந்தியன் படம் பார்த்துட்டு , நம்மள புறகணித்த சமுகத்துக்கு நாம யாருன்னு காட்டனும்,   தப்பு செஞ்சவங்கள கடத்தறோம் ,   பாம் வெச்சு கொல்லறொம் , அதை படம் பிடித்து யு tube ல upload பண்ணறோம்

தப்பு செய்யறவன்  அந்த  வீடியோ பார்த்து பயப்படனும் , என்று  அந்த நாலு  பேரு  கடத்தலில்  இடுபடுகிரார்கள்

முதலில் யாரை போட்டு  தள்ளராதுன்னு யோசிக்கிறாங்க  , நாம  BE  படிக்க காரணம் இந்த பேப்பர்  விளம்பரம் தான் ,  கண்ட கண்ட  காலேஜ்  காரன்கிட்ட  காச வாங்கிகிட்டு  ,   campusல ஊஊ xx வாங்கனு சொன்னான்  ,  இல்லாத ஒரு விஷத்தை  நம்ப  வெச்சு கழுத்தறுத்த  அந்த பத்திரிகை owner ரை கடத்தனும்னு முடிவு எடுத்து கடத்தறாங்க

அவன் சாவு கொடுரமா இருக்கணும்னு ,  அவன  கட்டி வெச்சு  அவன் வாய்ல பாம் வைக்கிறாங்க  ,  ஒரு  முனைல  நெருப்பு  பத்த வைக்கிறாங்க ,  அது கொஞ்ச கொஞ்சமா நகருது , கட்டி வெச்சவன் பதறான்  ,  கத்தறான்  , கடைசில  வெடிச்சு  சிதறுது ,  இதை youtube  ல பார்த்த மக்கள் பயத்துல ஆலருறாங்க , போலீஸ் எல்லாம் கொழப்பம் ,

இதை பேப்பர்ல படிச்ச சூப்பர் ஸ்டார் , படத்துல இத ஒரு  சீன் வைகிராறு ,  பாம் வெடிக்கிற நேரம் உள்ளபோய் , பாம்மை புடுங்கி வீசி அது வெடிச்சு ,  பாம் வெச்சு   அந்த நாலு பேரு  செத்து ,  வினை விதைத்தவன் வினை  அறுப்பான் என்று   படம் முடியுது , ரசிகர் எல்லாம் தலைவா , தலைவான்னு கத்தறாங்க

இந்த படத்தை பார்த்து அந்த நாலு பேரு காண்டு ஆகறாங்க , இவன் கொன்னாதான் நம்ம நாடு உருப்படும் , இவன கடத்தி கொள்ளலாம்னு முடிவு எடுத்து கடத்தல் ,

இந்த நடிகருக்கு  பாம் ரெண்டு காலுக்கு நடுவுல வைக்கிறார்கள்

ஒரு முனைல நெருப்ப பத்தவெச்சு , youtube ஆட்டோ upload சாப்ட்வேர் கேமரா பொருத்திவிட்டு கிளம்பி விடுகிறார்கள்

நெருப்பு அவர் கால் அருகில் நெருங்க , பயத்துல அந்த ஸ்டார் ஒன்னுக்கு போக , ஈராதுல பாம் செயல் இழக்குது

இந்த வீடியோ யு tube ல பார்த்த நாலு பேரு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்

இந்த வீடியோ பார்த்ததும் , வெடிச்சு இருந்தா அவன் தியாகி ஆகி இருப்பான் , ஒன்னுக்கு போனதால அவன் மார்க்கெட் காலி என்று சிரித்தார்கள்

சிரிச்சு கிட்டே  டிவி On செஞ்சு நியூஸ் சேனல் பார்த்தா , அங்க அந்த நடிகனோட ரசிகன்

எங்க தலைவர் அறிவோ அறிவு , ஒன்னுக்கு விட்டு பாம் அழிஞ்சு போக வெச்சது எல்ல்லாம் நினைக்கும்  போது புல்லு அரிக்குது , presence of mind க்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துகாட்டு , இந்த சம்பவத்தை பள்ளி புத்தகத்தில் பாட திட்டமாக வரவேண்டும்னு ,அவன் கோரிக்கை வைக்கிறான்

இந்த பேட்டியை பார்த்ததும் மனசு உடைஞ்சு இவெங்கள திருத்த முடியாதுன்னு முடிவெடுத்து , போலீஸ் ல surrender  அடைகிறார்கள்

ஜெயில் தண்டனை கிடைகிறது , ஒரு நாள் அந்த நடிகன் ஜெயிலுக்கு பிறந்த நாள் கொண்டாட வரான் , எல்லாத்துக்கும் rose milk குடுக்கிறான் , அத நால்வரும் வாங்கி குடிகிறாங்க

குடிச்சுட்டு திரும்பி பார்த்தா , அங்க ஒரு ப்ளெக்ஸ் போர்டு

தன்னை கொள்ள நினைத்தவருக்கே rose மில்க் கொடுத்த ரோசா பூ மனசுக்காரன் என்ற வாசகம்

இத படிச்சா நாலு பேரு ஜெயில்  மதில் மேல ஏறி , கிழ குதிச்சு உயிரை விட்டிடறாங்க

By

#Santhosh_Balaji_rajagopal

Comments