#நான்_பாட்டி_வீட்டுக்கு_போறேன்

நீண்ட நாள் குழந்தை இல்லாமல், மலை கோவில் கோவிலாக சென்று முருகன் அருளால் பிறந்த பெண் குழந்தை சங்கீதா

தவமிருந்து பெத்தா சொல்லவா வேண்டும், எதுக்கு எடுத்தாலும் ஆடம், தான் எத வேணும்னு நினைக்குதோ அத வாங்கி ஆகணும், இல்லாட்டி அந்த குழந்தை அடிக்கடி சொல்லும் வார்த்தை நான் பாட்டி வீட்டுக்கு போறேன்

அம்மா , சங்கீதாவை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு கீரை சோறு ஊட்டுகிறாள்

சங்கீதாவோ எனக்கு கடலை மிட்டாய் தான் வேண்டும், சோறு வேண்டாம், இனிமேல் மதியம் நான் சோறு திங்க மாட்டேன் எனக்கு 10 கடலை மிட்டாய் தான் வேணும் என்று அடம்

கீரைல இருக்கிற சத்து, மிட்டாய்ல இல்லமா! சொன்ன கேளு செல்லம்

நீ வாங்கி தரையா ? இல்ல நான் பாட்டி வீட்டுக்கு போறேன்

மிட்டாய் கிடைத்தது

பள்ளி செல்லும் பருவம் வந்தது , convent ஸ்கூலில் சேர்த்து விடுகிறார்கள் , பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, எதிரில் அரசு பள்ளி மாணவர்கள் வட்டிலும் கையுமாக வருகிறார்கள் , விவரமானவள் தகவலை கேட்டாரிந்தால்

அம்மா நான் இனிமேல் படிச்சா அரசு பள்ளில தான் படிப்பேன் , இங்க எல்லாம் கழுத்தை மாறி புத்தகம் சுமக்கணும், அங்க ரெண்டு நோட்டு, மதியம் சாப்பாடு அவங்களே குடுகிறாங்க , நான் அங்க தான் போவேன்

சங்கீதா, படிப்பு கெட்டு போய்டுமா

சேர்த்துவிடரையா? இல்ல நான் பாட்டி வீட்டுக்கு போறேன்

பள்ளி முடிந்து பள்ளியறை செல்லும் வயதை அடைந்தாள்

மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கியது , எதிலும் வித்யாசமாக யோசிக்கும் சங்கீதா இதிலும் அப்படி தான் ,

பெண் வீட்டார் வழக்க படி, மாப்பிள்ளை வீட்டார் முன்னே பெண்ணின் தலையில் முக்காடு போட்டு அமர வைத்து இருப்பார்கள்

9 மணிக்கு பெண் பார்க்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு மாப்பிள்ளை 9.05 மணிக்கு வருகிறான்

சங்கீதா - வாழ்க்கைல punctuality ரொம்ப முக்கியம் , பொண்ணு பார்க்கவே இவ்வளவு லேட் ணா , மத்ததுக்கு எல்லாம் நீ எவ்வளவு லேட் பண்ணுவ , அப்பா எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்

மகளே?

நான் பாட்டி வீட்டுக்கு போறேன்

அடுத்த மாப்பிள்ளை , 8.55 மணிக்கு வருகிறார்

சங்கீதா- பந்தீனா இலைல சோறு பரிமாறினதுக்கு அப்புறம் உட்காரனும், அடுத்தவன் சாப்பிட்ட எச்சி இலை எடுக்கறதுக்கு முன்னாடியே சீட்டுல துண்டு போட கூடாது, 5 நிமிஷத்துக்கு முன்னாடியே வந்து நாக்க தொங்க போட்டுக்கிட்டு நாய் மாதரி நிக்கரத பாரு

அப்பா அவனை போக சொல்லு, இல்ல நான் பாட்டி வீட்டுக்கு போறேன்

அடுத்த மாப்பிள்ளை சரியாக 9 மணிக்கு வருகிறார்

சங்கீதா- வாழ்கைணா முன்ன பின்ன இருக்கும், ஒன்பது மணி ணா ஒன்பதுக்கு தான் வராணுமா? ADjustment கிடையாதா ?

அப்பா அவனை போக சொல்லு, இல்ல நான் பாட்டி வீட்டுக்கு போறேன்

அடுத்த மாப்பிள்ளை

சங்கீதா-மாப்பிள்ளை சார், வெறும் நெத்தியா இருக்கு

மாப்பிள்ளை- நான் சாமி கும்பிடறது இல்ல, நாத்திகன்

சங்கீதா- அட நீ கோவிலுக்கு போக மாட்டாய? அப்புறம் என்ன மயிருக்கு எங்க அப்பன் பட்டு புடவை , நகை எல்லாம் எடுத்து குடுகிறான், அத எல்லாம் போட்டுக்கிட்டு கோவிலுக்கு போனதானே நாலு பேரு என்ன பார்த்து வயிறு எரிவாங்க, என் மனசு குளு குளுன்னு இருக்கு, அது ஒரு entertainment ,  உன்ன கட்டிக்கிட்டா புன்னகை பொன்னகைன்னு என்ற நகை யை அடகு வெச்சிடுவ

அப்பா அவனை போக சொல்லு, இல்ல நான் பாட்டி வீட்டுக்கு போறேன்

அடுத்த மாப்பிள்ளை, நெற்றியில் பட்டை , உத்திரச்சா கொட்டையுடன்

சங்கீதா- என்ன இது

மாப்பிள்ளை - நான் தீவிர ஆன்மிகவாதி

சங்கீதா- அப்பா என்ன இது? இவன் தீவிரவாதினு சொல்லறான்

மாப்பிள்ளை- அது இல்லமா, நான் எப்பவுமே கோவில் குலம்னு இருப்பேன், அத சொன்னேன்

சங்கீதா- எப்பவும் கோவில் குலத்துல இருந்தா, எப்படி குடும்பம் நடத்துவ, அந்த குளத்தில விழுந்து செத்திடு, வந்துட்டான் பொண்ணு பார்க்க

அப்பா அவனை போக சொல்லு, இல்ல நான் பாட்டி வீட்டுக்கு போறேன்

அப்பா சங்கீதாவை நெருங்கி வருகிறார், அவள் அணிந்திருந்த முக்காடு டை எடுக்கிறார் , சங்கீதாவின் தலை எல்லாம் வெள்ளை முடி

அப்பா சிவாஜி போல நெஞ்சில் அடித்துக்கொண்டு, பாட்டி வீட்டுக்கு போறேன் , பாட்டி வீட்டுக்கு போறேன்னு சொல்லி சொல்லி ,கடைசில நீயே பாட்டி ஆகிட்டயேமா

----------------------
அழகா இருக்கனும், ஒரே ஜாதி, பையனுக்கும் பெண்ணுக்கும் ரெண்டு வயசு வித்யாசம் தான் இருக்கணும்னு, well செட்டில், கார் இருக்கா? சொந்த வீடு இருக்கா? படிப்பு இருக்கா? நல்ல குடும்பமா ? சம்பளம் எவ்வளவு ? தோழில் பண்ணற பையன் வேண்டாம் , ராகு ,கேது செவ்வாய் சொந்தக்காரன் எல்லாத்தையும் சமலிச்சாதான் கல்யாணம் ,

ரொம்ப எதிர்பார்த்தா தா தா சங்கீதா மாதரி கிழவி தான் ஆகணும், பசங்க தன் கையே தனக்கு உதவினு வாழனும் , தேவையா

Story by
#santhosh_balaji_rajagopal

Comments