#வார்டானும்_வினோத_மாணவர்களும்_பகுதி_1

பொறந்ததுல இருந்து எங்கேயும் தங்குனது இல்ல, முதல் முதலா ஹாஸ்டல் போற , சாப்பாடு எல்லாம் சரிவருமா என்று பாட்டி கேட்க, நான் அது எல்லாம் பார்த்துக்கலாம் பாட்டி என்று சொல்லி விட்டு கிளம்பினேன்

ஹாஸ்டலில் முதல் அடி எடுத்து வெச்சாச்சு, இஞ்சர்ஜ் வந்தார், சார் நீங்க first இயர் க்கு தான் ஹாஸ்டல் வார்டன், admission போயிட்டு இருக்கு, second அண்ட் third இயர் ஹாஸ்டல் இது, இங்க ஏற்கனவே வார்டன் இருக்காங்க, அவங்க ரூம்ல இடம் இல்ல, first இயர் ஹாஸ்டல் திறக்கிற வரைக்கும் நீங்க, நாலாவது மாடில MBA மாணவன் ஒருவனிடம் சேர்ந்து தங்குங்க என்று அறை என்னை சொன்னார்

அறைக்கு சென்றது, ஒரு மாணவன் மட்டும் புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு இருந்தார், நல்ல அறிவாளி படிப்பாளியா இருப்பான் என்று மனதில் எண்ணிக்கொண்டேன்

வீட்டுல இருந்து அழைப்பு, ரூம் எல்லாம் வசதியா இருக்கா,

இருக்கு

ரூம் number என்ன?

Xxx

கூட்டுத்தொகை 5 வருது, சரி நல்லா சாப்பிடு

சரிமா என்று வைத்துவிட்டேன்

ரூம் மேட்டிடம் பேச்சு கொடுத்து கொண்டு , கதவை தாலிட்டுக்கொண்டு உறங்க சென்றேன் , ஒரு அரைமணி நேர உறக்கம், மணி 10.30 இருக்கும், கதவு தட தட என்று தட்ட படுகிறது, இதுவரை அந்த மாதரி நான் எழுந்தது இல்லை, தூக்கி வாரி போட்டது, எழுந்து கதவை திறந்தால் யாரையும் காணோம்

சரி என்று மீண்டும் தூக்கம், 11 மணி அளவில் கதவை மீண்டு தட்டி எழுப்பி விட்டார்கள், திறந்து பார்த்தால் யாரையும் காணோம்

பாத்ரூம் சென்று பக்கெட்ல தண்ணியை நிறைத்து, கதவை தாலிடாமல் , தாளிட்டதை போல பக்கெட் வைத்து முட்டு கொடுத்தேன்

அடுத்த முறை ஓங்கி கதவை தட்டும் போது அவர்கள் நிலை தடுமாறி ரூமுக்குள் விழுந்துவிட்டார்கள், சுதாரித்து அவர்கள் ஓட, பின் தொடர்ந்து அவர்கள் ரூமுக்கு சென்றேன், ஒரு 5 பேரு தண்ணி அடித்து கொண்டு இருந்தார்கள்,

தம்பி நான் புதுசா வந்த வாத்தியார், எதுக்கு தொல்லை குடுக்கறீங்க?

மன்னிச்சுக்கோங்க சார், நீங்க உள்ள இருப்பிங்கன்னு எனக்கு தெரியல, உங்கள எழுபறது எங்க நோக்கம் இல்ல, உங்க கூட தங்கி இருக்கும் MBA மாணவன், போன தடவை நாங்க தண்ணி அடிக்கிறதை மாட்டி விட்டுட்டான், அதான் அவன் நிம்மதியை கெடுக்க செஞ்சோம் என்றார்கள்

ரூமுக்கு சென்று MBA மானவனிடம், தம்பி ரொம்ப நேர்மையா இருக்கத்திங்க, ரொம்ப கஸ்ட்டம், கோவத்தை அடக்கிகொங்க என்றேன்,

அடுத்தநாள் வகுப்பு முடிந்து ஹாஸ்டல் திரும்பினேன், மாலை நேரம், ஹாஸ்டல் படிக்கட்டில் ஒருவர் மட்டும் புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறார் , அருகில் நெருங்க நெருங்க தான் தெரிந்தது அவர் எனது ரூம் மேட் என்று

அவனை கடக்கும் போது, தம்பி என்ன படிச்சுட்டு இருக்கீங்க என்று வினா எழுப்பினேன்?

புத்தகத்தின் முதல் பக்கத்தை திருப்பி படித்து பார்த்துவிட்டு organizational behaviour என்றான் , படிங்க என்று சொல்லிவிட்டு படிக்கட்டு ஏறினேன்

ஏறும் போது தான் ஒன்று தோன்றியது, அவன் கேட்டதும் புத்தகத்தின் பெயர் சொல்லவில்லை, முன் பக்கத்தை திருப்பி பார்த்துட்டு தான் சொன்னான், என்ன subject னு தெரியாமயே அரை மணி நேரமா படிச்சு இருகாணா அவன் எப்பேர் பட்டவன்

இரவு அவனிடம் பேசும் போது, அவன் குடும்ப சூழல் பற்றி கேட்டேன்

அப்பா பிசினஸ் மேன், தொழில் நல்லா போயிட்டு இருந்துச்சு, போன ஆட்சில அம்மா அந்த தொழிலை முடக்கினங்க, அதுல இருந்து எங்க தொழில் சரிவர போகல, முந்தை இருந்த வருமானம் இப்ப இல்லைனு அப்பா அடிக்கடி போலம்புவாறு, எங்க பிசினஸ் கேட்டு போக காரணமா இருந்த அம்மாவை எப்படியோ நாங்க தோற்கடித்து விட்டோம் என்றான்

மனதுக்குள் எனக்கு நானே, அம்மா போன ஆட்சில, லாட்டரி சீட் தடை செஞ்சாங்க, லாட்டரி பிசினஸ் பண்ணி இருப்பாங்க போல என்று எண்ணிக்கொண்டு , சரி எதுக்கும் என்ன பிசினஸ் என்று அவனிடமே கேட்டேன்

கந்து வட்டி பிசினஸ் என்றான், இப்ப எல்லாம் மிரட்டினா போலீஸ் கிட்ட சொல்லிடறாங்க என்றான்

சேவுத்துல மோதாத குறை, சில நாட்களில் நான் வேறு ரூம் மாறினேன், சில மாதங்களில் வேறு hostel, ஆறு மாதம் கடந்து ,

ஹாஸ்டல் incharge என்னிடம் , நீங்க முதல் முதல்ல ஒரு ரூம்ல தங்குனீங்க, அந்த ரூம் பையன் suicide attempt பண்ணிக்கிட்டான், ஒருவாரம் ஹாஸ்பிடல்ல வெச்சு, இப்ப மறுபடியும் ஹாஸ்டல் வந்துட்டான் என்றார்

ஹாஸ்டல் நோக்கி செல்லும் போது அவன் படியில் அமர்ந்து இருப்பதை கண்டு நெருங்கினேன்

என்னப்பா இப்படி பண்ணிகிட்ட, இது எல்லாம் தப்பு என்றேன்

வாழ்க்கைல யாரு வேணா நம்மை பார்த்து பொறாமை படலாம், பெற்ற தாய் தகப்பன் நம்மை பார்த்து பொறாமை படலாமா? என்று என்னை நோக்கி கேள்வியை வீசினான்

அப்படி எல்லாம் தாய் தகப்பன் பொறாமை படமாட்டாங்க தம்பி

இல்ல சார் , பொறாமை படறாங்க , எனக்கு கேம்பஸ் interview ல வேளை கிடைச்சு இருக்கு சார், போக கூடாது, சொந்த பிசினஸ் பாருன்னு சொல்லறாங்க சார்

கந்து வட்டி விடறது எல்லாம் ஒரு பிசினஸ், அதை MBA படிச்சுட்டு பார்க்க சொல்லறாங்க, கண்டிப்பா அவங்க அப்பா அம்மா கல் நெஞ்சு படைத்தவராக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு , நாங்க எல்லாம் படிச்சு முடிச்சு வேலைக்காக அழைஞ்சோம், உனக்கு வேளை தேடி வந்திருக்கு, உன்னோட திறமைக்கான அங்கிகாரம், இத உங்க அப்பா அம்மா வேண்டாம்னு சொல்லறது தப்பு,

ஆமாம் சார், வளர்ச்சியை கண்டு பொறாமை படறாங்க

மனதுக்குள், இவன் நிறைய arrear வெச்சு இருக்கான், இவனுக்கு யாரு வேளை குடுத்து இருப்பான் என்று எனக்கு நானே கேள்வி ,

இன்னைக்கு காலம் மாறிடுச்சு, யாரு மார்க் பார்த்து வேளை குடுகிறா, திறமையை பார்த்து குடுத்திருப்பான், இவன் கிட்ட இருக்கிற ஏதோ ஒரு நல்ல திறமை அந்த கம்பெனி காரனுக்கு புடிச்சு இருக்கும், அவன் குடுத்து இருப்பான் என்று எனக்கு நானே பதில்

தம்பி என்ன கம்பெனி? என்ன வேளை? என்ன சம்பளம்?

கம்பெனி வந்து chennai silks சார்.

பெரிய நிறுவனம் தான்

போஸ்டிங் வந்து salesman, சம்பளம் 6 ஆயிரம் என்றான் , இப்ப சொல்லுங்க சார்  , இந்த மாதரி ஒரு நல்ல வேளை கிடைக்கிறது எவ்வளவு கஸ்ட்டம் ? அம்மா அப்பா பொறாமையால் என்னோட life spoil ஆகா போகுது என்றான்

எனக்கு ஒரு பக்கம் ஆத்திரம், ஒரு பக்கம் அடக்க முடியாத சிரிப்பு, சிரிச்சா எங்க கடிச்சு வெச்சுயிருவானோ என்ற பயம் , ஒரு மனுஷனுக்கு வாந்தியும் பேதியும் ஒண்ணா வந்தா கூட இப்படி இருக்காது, எல்லாத்தையும் அடக்கிக்கிட்டு

சிவாஜி போல, தம்பி நீ அந்த வேளைக்கு சேரனும் , நான் அங்க வந்து உன் கையாள துணி எடுக்கிறேன், அத உன் ஞாபகம் வெச்சுக்கிறேன், நீ முன்னேறி உங்க அப்பா மூஞ்சில கறியை பூசனும், நான் அத பாக்கணும்

Thanks sir, இதுக்கு முன்னாடி ரெண்டு பேத்து கிட்ட இத சொன்னேன் , அவங்க என்ன பைத்தியம்னு சொன்னாங்க, நீங்க தான் ஆறுதலான பேசினிங்க, நான் உங்கள மறக்கமாட்டேன் ,

எனக்கு முன்னாடி பேசின ரெண்டு ஜீவன் என்ன நிலைமைல இருபங்களோ என்று எண்ணிக்கொண்டே விலகினேன்

By
Santhosh balaji rajagopal

Comments